Sunday, December 3, 2017

பான், வங்கி கணக்கு, ஆதார் எண் இணைத்து வீட்டீர்களா?- நெருங்குகிறது அவகாசம்

பல்வேறு திட்டங்கள், சலுகைகள், வங்கி கணக்குகள், தொலைபேசி எண் ஆகியவற்றுடன் ஆதார் எண் இணைப்பது அவசியம் என மத்திய அரசு ஏற்கனவே வலியுறுத்தியுள்ளது. ஆனால் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் நடந்து வரும் நிலையில் இறுதி தீர்ப்பு இன்னமும் வெளியாக வில்லை. மேலும் சில திட்டங்களுக்கு ஆதார் எண் இணைப்புக்கு கால அவகாசம் வழங்க தயார் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எனினும் தற்போதைய நிலையில், வங்கி கணக்கு, மொபைல்போன் உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண் இணைக்க கடைசி நாள் நெருங்கி வருகிறது. அதன் விவரம் வருமாறு:
* பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்க டிசம்பர் 31ம் தேதி கடைசி நாள். ஆதார் எண் இணைக்காவிட்டால், வருமான வரி தாக்கல் செய்ய இயலாமல் போகும்.
* வங்கிக்கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ம் தேத இறுதி நாள். அதன் பின் வங்கிகணக்குகள் செயல்படாமல் முடக்கி வைக்கப்படும்.
* பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் பண்ட் கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்க டிசம்பர் 31ம் தேதி கடைசி நாள். அதன் பின் அந்த கணக்குகள் முடக்கி வைக்கப்படும்.
* இன்சூரன்ஸ் பாலிசிகளுடன் ஆதார் எண்ணை இணைக்க கடைசி நாள் டிசம்பர் 31ம் தேதி. அதன் பின் பாலிசி முடங்கி விடும்.
* தபால் நிலைய திட்டங்கள், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி, பத்திரங்கள் அனைத்திற்கும் டிசம்பர் 31ம் தேதி இறுதி நாள். அதன் பின் அவை அனைத்து கணக்குள் செயல்படாமல் நிறுத்தி வைக்கப்படும்.
* தொலைபேசி எண்கள், மொபைல் போன் எண்களுடன் ஆதார் எண் இணைப்பதற்கு 2018 பிப்ரவரி 6ம் தேதி கடைசி நாள். அதன் பின் தொலைபேசி எண் செயல்படாது.
* சமையல் எரிவாயு, ரேஷன் உள்ளிட்ட மானியங்கள் பெற ஆதார் எண் இணைப்பதற்கு இறுதி நாள் 2018 மார்ச் 31ம் தேதி இறுதி நாள். அதன் பின் மானியம் மற்றும் நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல் போகக்கூடும்.
ஆதார் எண் இதுவரை பெறாதவர்களுக்கு ஆதார் எண் வழங்கும் பணி நடந்து வருகிறது. அவர்களுக்கு பல்வேறு திட்டங்களுக்கும் ஆதார் எண் இணைக்க 2018 மார்ச் 31ம் தேதி வரை கால அவகாசம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Pending inquiry no bar to travel abroad, says HC

Pending inquiry no bar to travel abroad, says HC  Ashish.Mehta@timesofindia.com 26.10.2024  Jaipur : A 59-year-old electrical engineer poste...