Tuesday, February 6, 2018

புகைப்பிடித்தலை விடவும் மோசமான பழக்கம் இது: புள்ளி விவரம் சொல்லும் ஷாக் ரிப்போர்ட்

By DIN | Published on : 05th February 2018 12:53 PM |



ஹைதராபாத்: திரையரங்குகளில் சினிமா தொடங்கும் முன்பு போதைப் பொருட்கள் தொடர்பான எச்சரிக்கை வாசகங்களை பலரும் அலட்சியம் செய்யலாம். ஆனால் அதை உறுதி செய்யும் இந்த செய்தியை அலட்சியப்படுத்த முடியாது.

ஹைதராபாத்தில் செயல்படும் ஆன்காலஜி மற்றும் மாவட்ட புற்றுநோய் மையமான எம்என்ஜே மையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கும் சம்பவம் போதைப் பொருட்களை பயன்படுத்துவது தொடர்பான செய்தி உண்மையின் ஆழத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

அதாவது, கடந்த ஒரு ஆண்டில் வாய்ப்புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 258 பேரில், 97 சதவீத நோயாளிகளுக்கு புகைப்பிடித்தல் அல்லது குடிப்பழக்கம் அல்லது போதைப் பாக்குகளைப் பயன்படுத்தும் பழக்கம் இருந்தது என்பதுதான்.

இந்த 258 நோயாளிகளில் 205 பேருக்கு போதைப் பாக்குகளைப் பயன்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது. இதில், குடிப்பழக்கம் இருப்பவர்களுக்கும், புகைப்பழக்கம் இருப்பவர்களுக்கும் இடையே அவ்வளவு பெரிய வித்தியாசம் ஒன்றும் இருந்துவிடவில்லை என்றாலும், வாயில் போதைப் பொருட்களை போட்டு மெல்லும் பழக்கம் இருப்பவர்களை புற்றுநோய் அதிகம் பாதித்துள்ளது.

இந்த 205 பேரில் 126 பேர் புற்றுநோயின் அபாய நிலையில் இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக பார்த்தால், 55.8 சதவீதம் பேர் புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் அலட்சியம் செய்துவிட்டு அபாய நிலையில் இருப்பவர்கள்தான். அதாவது புற்றுநோய் பாதிப்பு அல்லது புற்றுநோய் கட்டி உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவியிருக்கும் நிலையில் உள்ளனர். வெறும் 12 சதவீதத்தினர் மட்டுமே புற்றுநோயின் ஆரம்பக் கட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளனர்.மருத்துவர் ஏவிஎஸ் சுரேஷ் இது பற்றி கூறுகையில், புகைப்பிடித்தலை விடவும், வாயில் வைத்து சுவைக்கும் போதை வஸ்துக்களால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பது இந்த புள்ளி விவரங்களின் மூலம் உறுதியாகியுள்ளது. இது குறித்து பொதுமக்களிடையே மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நேரம் இது. அதே சமயம், புகைப்பிடித்தலும் நோயை உருவாக்கும் என்பதையும் மறுத்துவிட முடியாது. சுமார் 5 முதல் 15 ஆண்டுகள் வரை இதுபோன்ற போதை வஸ்துக்களைப் பயன்படுத்துவோருக்கு புற்றுநோய் ஏற்படுவது அதிகரித்துள்ளது என்றும், வாயில் மெல்லும் போதை வஸ்து பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும், அப்படி ஏற்படுத்திக் கொண்டால் கைவிடுவது மிகவும் கடினமானது என்றும் மருத்துவர் விளக்கியுள்ளார்.

No comments:

Post a Comment

Holiday calling: Daily direct flights to Bangkok now

Holiday calling: Daily direct flights to Bangkok now Arvind.Chauhan@timesofindia.com 05.01.2025 Lucknow : To cater to the increasing rush fo...