Tuesday, February 6, 2018

சென்னையில் ஒரு நாள், மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் உயர்வு

By DIN | Published on : 06th February 2018 08:28 AM


சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் அளிக்கப்பட்டு வரும் ஒரு நாள் பயண அட்டை கட்டணம் 50 ரூபாயில் இருந்து 80 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளன. இந்த கட்டண உயர்வு வரும் 8-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு கடந்த 20ம் தேதி பேருந்து கட்டணத்தை மாற்றியமைத்த பிறகு, ஒரு நாள் பயணச்சீட்டு பாஸ் கட்டணம் நிர்ணயிக்கப்படாமல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

ஏற்கனவே பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக போராடி வருகின்றன. பொதுமக்களும் பேருந்து கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு நாள் பயண அட்டை கட்டணமும் உயர்த்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் மாதாந்திர பஸ் பாஸ் ரூ.1,000ல் இருந்து ரூ.1,300 ஆக உயருகிறது.

No comments:

Post a Comment

Holiday calling: Daily direct flights to Bangkok now

Holiday calling: Daily direct flights to Bangkok now Arvind.Chauhan@timesofindia.com 05.01.2025 Lucknow : To cater to the increasing rush fo...