Sunday, October 12, 2014

திருநீறு இட்ட அவ்வை சந்திரலேகா

திருநீறு இட்ட அவ்வை சந்திரலேகா

சந்திரலேகா படத்தைப் போலவே ஜெமினி எஸ்.எஸ். வாசன், அவ்வையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரம்மாண்டமாகத் தயாரித்தார். அன்று அவ்வையாராக நடிக்க ஒரே சாய்ஸாக இருந்த ஐந்து ஆண்டுகள் படப்பிடிப்பு நடத்தி உருவான அந்தப் படம் 1953-ல் வெளியாகி காவிய வெற்றியைப் பெற்றது. படத்தில் அவ்வையாராகவே வாழ்ந்து காட்டியிருந்தார் கே.பி.சுந்தராம்பாள். அவருடைய குரலும், பாடல்களும், நடிப்பும் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றன.
1965-ல் வெளியான திருவிளையாடல் படத்தில் மீண்டும் அவ்வையாராகவும் நடித்து தமிழர்கள் மத்தியில் அவ்வையாகவே அடையாளம் பெற்றுவிட்ட கே.பி.எஸ். மறைந்தபோது அவரை ‘தேசிய நட்சத்திரம்’ என்று புகழ்ந்தார் எம்.ஜி.ஆர். ஒருமுறை கோவை கொடுமுடியில் உள்ள கே.பி.எஸ். வீட்டுக்குச் சென்றிருந்தார் எம்.ஜி.ஆர். தனது வீட்டின் பூஜையறைக்கு அழைத்துச் சென்று அவரது நெற்றியில் திருநீறும் குங்குமமும் இட்டார் கே.பி.எஸ். பிறகு கே.பி.எஸ்ஸுடன் தரையில் அமர்ந்து எம்.ஜி.ஆர் உரையாடியதை க்ளிக்கியவர் அந்நாளைய புகைப்படக்காரர் கதிரவன்.
வாசித்தார்.

No comments:

Post a Comment

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...