சென்னை,
சிவகாசி பட்டாசுகளே சிறந்தது என்றும், சீன பட்டாசுகளை யாரும் வாங்கி ஏமாற வேண்டாம் என்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் தெரிவித்தார்.
பட்டாசு பஜார்
தீபாவளி பண்டிகை வருகிற 22–ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி சென்னை தீவுத்திடலில் 120 கடைகளுடன் பட்டாசு பஜார் அமைக்கப்பட்டன.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் நேற்று பட்டாசு பஜாரை திறந்துவைத்து, விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் பீர் முகமது உள்பட போலீசார், தீயணைப்பு வீரர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த த.வெள்ளையன் கூறியதாவது:–
சிவகாசி பட்டாசுகளே தரமானவை
சென்னை ஜார்ஜ் டவுனில் பல ஆண்டுகளாக பட்டாசு வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளே, இங்கு வியாபாரம் செய்ய உள்ளனர். எனவே தரமான பட்டாசுகளே விற்பனை செய்யப்படும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், இந்த வருடம் குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையில் புதுமையான பட்டாசுகள் விற்பனைக்கு வந்திருக்கின்றன.
உண்மையிலேயே சிவகாசி பட்டாசுகளே தரமானவை, வெடிக்க ஏற்றவை. உள்நாட்டு பட்டாசுகள் இருக்கும்போது, நமக்கு எதற்கு சீன பட்டாசுகள்?. மேலும், கீழே போட்டால் கூட வெடிக்கும் அபாயம் கொண்ட சீனப்பட்டாசுகள் மிகவும் ஆபத்தானவை. எனவே சீன பட்டாசுகளை வாங்கி யாரும் ஏமாறவும் வேண்டாம், ஆபத்தை விலை கொடுத்து வாங்கவும் வேண்டாம். இங்கு எந்த கடையிலும் அரசால் தடை செய்யப்பட்ட சீனப்பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதில்லை. எனவே, இங்கு பட்டாசுகளை வாங்கி தீபாவளியை மகிழ்ச்சிகரமாக கொண்டாடுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
23–ந்தேதி வரை விற்பனை
பட்டாசு விற்பனை குறித்து தீவுத்திடல் பட்டாசு வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் கே.அப்பாஸ், துணைச்செயலாளர் ஆர்.அப்துல் ரகுமான் ஆகியோர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘தீவுத்திடலில் வருகிற 23–ந்தேதி (வியாழக்கிழமை) வரை தினமும் காலை 10 முதல் இரவு 10 மணி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது’’, என்றனர்.

No comments:
Post a Comment