Tuesday, May 19, 2015

சர்க்கரை நோய்: புதிய செயலி அறிமுகம்

சர்க்கரை நோய் குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ள புதிய செல்லிடப்பேசி செயலி சென்னையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையத்தின் சார்பில் இந்த செல்லிடப்பேசி செயலி (அப்ளிகேஷன்) செய்யப்பட்டது.

இது குறித்து டாக்டர் வி.மோகன் கூறியது:

இந்தியாவில் சர்க்கரை நோய் தொடர்பான விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயலியில் சர்க்கரை நோய் குறித்த அடிப்படைத் தகவல்கள், உணவுக் கட்டுப்பாடுகள், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கொண்டு என்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் உள்ளன.

"ஸ்மார்ட்போன்' வகை செல்லிடப்பேசிகளில் Dr.Mohans Diabetes Management என்ற இந்தச் செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024