Thursday, November 10, 2016

'பங்க்'குகளில் சில்லரைக்கு பதில் துண்டு சீட்டு

தாம்பரம்,: பெட்ரோல், 'பங்க்'களில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் கொடுத்தவர்களுக்கு, சில்லரைக்கு பதிலாக, துண்டு சீட்டே அளிக்கப்பட்டது.நேற்று நள்ளிரவு முதல், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, பிரதமர் மோடி அறிவித்தார். வங்கிகள், அஞ்சலகங்கள், பெட்ரோல் 'பங்க்'களில், 500, 1,000 ரூபாய் நோட்டுகளை கொடுக்கலாம் என, அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, நேற்று காலை, மேற்கு தாம்பரம், கடப்பேரியில் உள்ள தனியார் பெட்ரோல், 'பங்க்'கில், வாகன ஓட்டிகள் பலர் பெட்ரோல் போட சென்றனர். 'பங்க்' ஊழியர்கள், 'சரியான சில்லரை கொடுத்தால் மட்டுமே பெட்ரோல் போடப்படும்' என, தெரிவித்தனர்.அதே நேரம், 500, 1,000 ரூபாய் நோட்டுகளை தள்ளி விடுவதற்காகவும், பலர் பெட்ரோல் போட வந்தனர். அவர்கள் முழு பணத்துக்கும் பெட்ரோல், டீசல் போட்டு சென்றனர்.சில வாகன ஓட்டிகள், 100, 200, ரூபாய்க்கு பெட்ரோல் போடுங்கள் என, 'பங்க்' ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.சில்லரை பிரச்னையால், 'பங்க்' ஊழியர்கள், துண்டு சீட்டில், 'பங்க்' முத்திரையுடன், மீதி சில்லரை தொகையை எழுதி கொடுத்து, அனுப்பினர்.அடுத்தடுத்த நாட்களில், அந்த துண்டு சீட்டை காண்பித்து, அதில் உள்ள மீதி தொகைக்கு, வாகன ஓட்டிகள் பெட்ரோல் போட்டு கொள்ளலாம் என, 'பங்க்' சார்பில் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.09.2024