கருப்புப் பணத்தை மாற்றுவது எப்படி? கூகுளில் தேடியதில் குஜராத் முதலிடமாம்; மோடி சார் பார்த்துக்கோங்க...
By DIN | Published on : 14th November 2016 12:23 PM
புது தில்லி: கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவது எப்படி என்று கூகுளில் தேடியவர்களில் குஜராத் மாநிலம் முதலிடம் பிடித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நவம்பர் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து வங்கிகள் ஒரு நாளும், ஏடிஎம்களுக்கு இரண்டு நாட்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், தங்கள் கைவசம் உள்ள கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவது எப்படி என்று ஏராளமான வெள்ளந்தி மக்கள் கூகுள் சேர்ச்சில் போட்டுத் தேடியுள்ளனர்.
இதில் குஜராத் மக்கள் தான் முதலிடத்தில் இருப்பதாகவும், ஜார்க்கண்ட், அரியானா மாநிலங்களில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
ஆனால், நம் தமிழ்நாட்டு மக்களோ கூகுளில் குறைந்த அளவில் தேடி 22வது இடத்தைப் பிடித்து தமிழகத்துக்கு பெருமை தேடித் தந்துள்ளனர்.
No comments:
Post a Comment