Wednesday, December 21, 2016

Posted Date : 12:24 (21/12/2016)
Last updated : 12:33 (21/12/2016)

ராமமோகன் ராவ் வீட்டில் ரெய்டு... பரபர பின்னணி, அதிர்ச்சியில் அ.தி.மு.கவினர்!
vikatan.com



யார் இந்த ராமமோகன ராவ்

ராமமோகன ராவ், ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர். கடந்த 1985ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்தவர். 2017ம் ஆண்டு செப்டம்பரில் ஓய்வு பெற உள்ளார். கடந்த மே மாதம், நடந்த சட்டசபை தேர்தலின் போது அ.தி.மு.க வெற்றி பெற்றது. அப்போது, கூடுதல் தலைமை செயலாளர் என்ற அந்தஸ்தில் இருந்த அவர், ஜெயலலிதாவின் முதன்மை செயலாளராக பணியாற்றி வந்தார். ஜூன் 8ம் தேதி தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆகிய பொறுப்புக்களை வகித்தவர். இவர் இதுவரை அயல் பணி என்ற வகையில் மத்திய அரசு பணிக்கு செல்ல வில்லை. 2001 முதல் 2003 வரை குஜராத் கடல்சார் வாரிய துணை தலைவராக இருந்துள்ளார். ராமமோகன ராவின் தாய்மொழி தெலுங்கு என்றாலும் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் சரளமாக பேசுவார்.

ராமமோகன ராவ், தமிழக அரசின் தலைமை செயலாளரானதும், அவருக்கு நெருக்கமானவர்களின் ஆதிக்கம் தலைதூக்கியது. தமிழக ஆளுநராக இருந்த ரேசைய்யாவுக்கும் ராமமோகன ராவுக்கும் அரசு பதவிகளை கடந்து நல்ல நட்பு இருந்தது. இவர்கள் இருவருக்கும் தூதுவராக திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் இருந்தார். இதனால் அவர் அதிகாரத்தில் கோலோச்சினார்.

இந்த சூழ்நிலையில் தொழிலதிபர் சேகர்ரெட்டியிடம் நடத்தப்பட்ட வருமானவரி சோதனைக்குப் பின்னால் பல அரசியல் சதுரங்க வேட்டை உள்ளது. கர்நாடகாவில் நடந்த வருமானவரி சோதனையில் அமைச்சர் எடப்படி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கம் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணைக்குப் பிறகு வருமானவரித்துறை சேகர்ரெட்டி, சீனிவாச ரெட்டி, பிரேம் ஆகியோர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சேகர்ரெட்டி கொடுத்த தகவலின்படியே ராமமோகன் ராவின் சென்னை அண்ணாநகர் வீடு உள்பட 13 இடங்களில் இன்று காலை வருமானவரியினர் சோதனை நடத்தினர்.

இந்த அதிரடி சோதனையால் ராமமோகன ராவிடம் அதிக நெருக்கம் காட்டிய அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஏற்கனவே வருமான வரித்துறையினரின் சந்தேக வளையத்திலிருக்கும் அமைச்சர் ஒருவரும், முன்னாள் அமைச்சரும் அப்செட் ஆகி இருக்கின்றனர். இந்த சோதனை சங்கிலி தொடர் போல தொடரும் என்கிறது வருமானவரித்துறை. இந்த சோதனை எல்லாம் தமிழக அரசில் ஆட்சி பிடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு சோதனை காலமாக மாறி உள்ளது. சேகர் ரெட்டியிடம் நெருக்கமாக இருந்தவர்கள் பட்டியலில் ஓ.பன்னீர் செல்வமும் ஒருவர் என்கிறார்கள். இருவரும் திருப்பதியில் ஒன்றாக இருந்த புகைப்படமும் வெளியானது.

சோதனை குறித்து வருமான வரித்துறையினர் கூறுகையில், "காலை 7 மணிக்கு இந்த சோதனை தொடங்கியது. வீட்டில் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் மற்றும் அவரது குடும்பத்தினர் இருந்துள்ளனர். வருமானவரித்துறை அதிகாரிகளைப் பார்த்ததும் ராமமோகன ராவின் முகத்தில் எந்தவித பதற்றமும் இல்லை. சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் முக்கியத் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது" என்றனர்.

மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பலரையும் பின்னுக்குத் தள்ளி தலைமை செயலாளர் பதவிக்கு வந்தார் என்ற சர்ச்சையும் ராமமோகன ராவ் மீது உள்ளது. சீனியாரிட்டி அடிப்படையில் ராமமோகன ராவ், 20வது இடத்தில் இருந்தார். அவருக்கு தலைமை செயலாளர் பதவிக்கு கொடுக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இப்போது அந்த ஆச்சரியத்துக்கான விடையும் தெரியவரும்.

No comments:

Post a Comment

Woman has right to be identified in biological mother’s name: HC

Woman has right to be identified in biological mother’s name: HC  Abhinav.Garg@timesofindia.com 28.09.2024 New Delhi : It is a fundamental r...