Thursday, June 1, 2017

தபால் துறை தேர்வு முறைகேடு : சி.பி.ஐ., அதிரடி விசாரணை

பதிவு செய்த நாள்31மே2017 22:21

புதுடில்லி: தமிழ்நாடு தபால் துறையில் காலியாக உள்ள இடங்களுக்கு நடந்த தேர்வில், ஹரியானாவைச் சேர்ந்தவர்கள், தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற்றது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.
தமிழ்நாடு வட்ட தபால் துறையில் காலியாக உள்ள தபால்காரர் உள்ளிட்ட இடங்களுக்கு, 2016, டிச., 11ல், 'ஆன்லைன்' மூலம் தேர்வு நடந்தது.
இதில், பொது அறிவு, கணிதம், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய பாடங்களில் தேர்வு நடந்தது. இதற்கான முடிவுகள், இந்த ஆண்டு, மார்ச்சில் வெளியிடப்பட்டன.

அப்போது, இந்தத் தேர்வை எழுதிய ஹரியானாவைச் சேர்ந்தவர்களும், ஹரியானாவில் இருந்து தேர்வு எழுதிய பஞ்சாப், மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர்களும் அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதுவும், இதுவரை தமிழைப் படித்திராத அவர்கள், தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

இது தொடர்பாக, தபால் துறை அளித்த புகாரின் அடிப்படையில், சி.பி.ஐ., விசாரணையை துவக்கியுள்ளது. அதில், ஹரியானாவில் ஒரு குறிப்பிட்ட கம்ப்யூட்டர் முகவரியில் இருந்து, 47 பேர் தேர்வு எழுதியுள்ளதும், 36 பேருக்கு, ஒரே இ - மெயில் முகவரி இருப்பதும் தெரியவந்துள்ளது.

'அரசு அதிகாரிகள் உதவியுடன், சிலர் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் ஈடுபட்டவர்களை நெருங்கி விட்டோம்' என, சி.பி.ஐ., அதிகாரிகள்
கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS PAPER CLIPPINGS