"நீட் தேர்வு ரிசல்ட் இன்னைக்கு இல்லையாம்" - தொடரும் இழுபறி!!
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது எனவும், இன்னும் சில நாட்களுக்கு எந்த முடிவுகளும் வெளியாக வாய்ப்பில்லை எனவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்பு படிக்க மாணவ மாணவியர்கள் நீட் தேர்வு என்ற புதிய தேர்வை எழுத வேண்டும் என மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால் அதற்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மாணவர்கள் தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்த வண்ணம் இருந்தன. ஆனால் கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த மாதம் 7 ஆம் தேதி மத்திய அரசு நீட் தேர்வை நடத்தி முடித்தது.
1, 522 வெளிநாடு வாழ் இந்தியர், வெளிநாட்டினர் 613 பேர் உட்பட 11,38,900 பேர் தேர்வு எழுதினர். 65 ஆயிரம் பேர் எம்.பி.பி.எஸ், 25 ஆயிரம் பி.டி.எஸ் இடங்களுக்கு தேர்வு நடைபெற்றது.
தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாகவும், அனைத்து மாநிலங்களிலும் ஒரே வினாத்தாளை கொண்டு தேர்வுமுறை நடத்தப்படவில்லை எனவும் மாணவர்கள் நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளை தொடுத்து வந்தனர்.
இதனால் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட 4 வாரம் தடை விதித்து மே 24 ல் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 13 க்கு பிறகு வெளியிடப்படும் எனவும் நீதிமன்ற தடையால் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை எனவும் சிபிஎஸ்இ தகவல் தெரிவித்திருந்தது.
மேலும் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி சிபிஎஸ்இ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து இதுகுறித்த வழக்கில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. மாநில உயர் நீதிமன்றங்கள் நீட் தேர்வு குறித்த வழக்குகளை விசாரிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியது.
இதையடுத்து நீட் தேர்வு முடிவுகள் www.cbseresult.nic.in என்ற இணைய தளத்தில் இன்று வெளியிடப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது எனவும், இன்னும் சில நாட்களுக்கு எந்த முடிவுகளும் வெளியாக வாய்ப்பில்லை எனவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
Dailyhunt
No comments:
Post a Comment