Saturday, June 24, 2017

நீட் தேர்வு: தமிழக மாணவர்களின் பின்னடைவுக்கு மத்திய அரசே காரணம்

By DIN  |   Published on : 24th June 2017 02:49 AM  |   
நீட் தேர்வு தொடர்பாக அனுப்பப்பட்ட மசோதாவை மத்திய அரசு கண்டுகொள்ளாததால், இந்தத் தேர்வில் தமிழக மாணவர்கள் பின்னடைவைச் சந்திக்க நேர்ந்துள்ளது என நீதிபதி ஹரிபரந்தாமன் குற்றம்சாட்டியுள்ளார்.
நீதிபதி ஹரிபரந்தாமன்: நீட் தேர்வு தரிவரிசையில் முதல் 25 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர்கூட இடம்பெறாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டம் வேறு, மாநில அரசின் பாடத் திட்டம் வேறாக இருப்பதால் நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு பொருந்தாது என பலமுறை அறிவுறுத்தப்பட்டது.
நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா மத்திய அரசின் இலாகாவிலேயே இன்னும் இருக்கிறது. குடியரசுத் தலைவருக்கு இதுவரை அனுப்பப்படவில்லை. நமது மாணவர்களின் நலன் கருதி இந்த மசோதாவை நிறைவேற்றித் தர வேண்டுமென மத்திய அரசை தமிழக அரசு மீண்டும் நிர்பந்திக்க வேண்டும்.
கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு: தொடர்பில்லாத பாடத்திட்டத்தால் நீட் தேர்வெழுதிய மாணவர்களால் எப்படி அதிக மதிப்பெண் முடியும்?
இந்தத் தேர்வு முடிவுகளால் மருத்துவராக வேண்டும் என்று நினைத்த தமிழக மாணவர்களின் கனவு கனவாகவே ஆகிவிட்டது.
தமிழகத்தில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று நீட் தேர்வுக்கு முழுமையாகத் தயாரான மாணவர்களால் கூட இந்தத் தேர்வில் அதிக மதிப்பெண்ணை பெற முடியவில்லை. மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் மத்திய அரசு புறக்கணித்தது சட்டவிரோத செயலாகும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 09.01.2025