Sunday, July 9, 2017

பேரறிவாளனுக்கு 'பரோல்' பரிசீலிப்பதாக முதல்வர் தகவல்

பதிவு செய்த நாள் 09 ஜூலை
2017
00:01


சென்னை, ''ராஜிவ் கொலை வழக்கில் கைதாகி, சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு, 'பரோல்' வழங்குவதில், அனைவருடைய உணர்வுகளையும், அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கும்,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வலியுறுத்தி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட பலர், சட்டசபையில் கோரிக்கை விடுத்தனர். அதற்கு, முதல்வர் பழனிசாமி அளித்த பதில்:

எம்.எல்.ஏ.,க்கள் கருணாஸ், தனியரசு, தமீமுன் அன்சாரி, துணை சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்டவர்கள், தங்கள் உணர்வுகளை பிரதிபலிக்கிற விதத்தில், 'பேரறிவாளனை பரோலில் விட வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர்.
ஏற்கனவே, 15 நாட்களுக்கு முன், தமீமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர், என் அறைக்கு வந்து, இந்த கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

இது குறித்து, சட்ட அமைச்சர், சி.வி.சண்முகத்துடன் கலந்து பேசினேன்.
பின், அந்த மனு, தலைமை வழக்கறிஞருக்கு அனுப்பி, சட்ட ஆலோசனை பெற்று, பரிசீலித்து கொண்டிருக்கிேறாம்.

மீண்டும் அந்த பிரச்னையை, எதிர்க்கட்சி தலைவர் எழுப்பிய போது, 'பரிசீலிக்கப்படும்' என, தெரிவித்தேன். அனைவருடைய உணர்வுகளையும், அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024