ஜூலை 14 அன்று வெளியாகும் நான்கு படங்கள்!
விக்ரம் வேதா, பண்டிகை, ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், கூட்டத்தில் ஒருத்தன்...
இந்த நான்கு படங்களும் அடுத்த வாரம் ஜூலை 14 அன்று வெளிவரவுள்ளது.
விஜய் சேதுபதி - மாதவன் இணைந்து நடித்துள்ள படம் விக்ரம் வேதா. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இந்தப் படம் ஜூலை 7-ம் தேதி வெளிவருவதாக இருந்தது. பிறகு அதன் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம் தணிக்கையில் மறு ஆய்வுக்கு விண்ணப்பித்துள்ளது. யூ/ஏ கிடைக்கும் பட்சத்தில் இந்தப் படமும் ஜூலை 14 அன்று நிச்சயம் வெளிவரவுள்ளது.
விக்ரம் வேதா படத்தை சசிகாந்தின் ஒய்நாட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. வரலட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். இசை - சாம் சி.எஸ். ஆக்ஷன் த்ரில்லர் வகையில் இப்படம் அமைந்துள்ளது.
ஒரே நாளில் நான்கு படங்களும் வெளிவருவதால் ஒவ்வொரு படமும் மற்ற படத்தால் பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது. அதிலும் விக்ரம் வேதா படம் வெளிவருகிற பட்சத்தில் மற்ற 3 சிறிய படங்களும் பாதிக்கப்படும் என்றறியப்படுகிறது. இதனால் கடைசி சமயத்தில் ஒன்றிரண்டு படங்களி வெளியீடு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Dailyhunt
No comments:
Post a Comment