Sunday, July 9, 2017

ஆங்கிலம் தெரியாது ஆனாலும்... போயிங் 777 விமானம் இயக்கிய முதல் இளம் பெண் கமாண்டர் 
 


கேப்டன் அனி திவ்யா (30 வயது), இவர் பதான்கோட்டில் பிறந்தாலும் தன் குழந்தைப் பருவம் முதலே ஆந்திரபிரதேச மாநிலத்தின் விஜயவாடாவில் வசித்து வருகிறார். இவரது தந்தை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆவார்.

இந்நிலையில், போயிங் 777 ரக விமானத்தை இயக்கிய முதல் இளம் கமாண்டர் என்ற சாதனையைப் படைத்தார் அனி திவ்யா.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நான் எனது பெற்றோர், ஆசிரியருக்கு முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பல தடைகளைக் கடந்து, ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து கடின முயற்சியின் மூலமாக இந்த இடத்தை தற்போது அடைந்துள்ளேன்.

சிறு வயது முதலே பொருளாதார சிக்கல், மொழிப் பிரச்னை, கலச்சார வேற்றுமை ஆகியவற்றை வெற்றியுடன் கடந்து வந்ததற்கு எனது பெற்றோரும், நண்பர்களும் பெரிதும் உதவினர்.

நான் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்பதால், பைலட் பயிற்சி பெற போதுமான அளவு பண வசதி இல்லை. இருப்பினும், எனது பெற்றோர் என் மீது நம்பிக்கை வைத்து பல சங்கடங்களுக்கு இடையில் பைலட் பயிற்சி பெற வைத்தனர். அவர்கள் இதற்காக செலவு செய்த பணத்தை அவ்வளவு எளிதில் என்னால் சம்பாதித்து விட முடியாது.

இதற்கிடையில் பலர் என்னை கேலி செய்தனர். அதிலும் குறிப்பாக எனக்கு ஆங்கிலம் தெரியாது. ஏனென்றால், விஜயவாடாவில் யாரும் ஆங்கிலத்தில் பேசுவது கிடையாது. ஆகவே எனக்கும் முழுமையாக தெரியாது.

நான் சிறு வயது முதலே, தெலுங்கு மொழியில் தான் எழுதி, படித்து, பேசிக்கொண்டிருந்தேன். மற்ற இடங்களிலும் தெலுங்கு மொழியே பிரதானமாக இருந்தது.

ஆனால், இந்த மொழிப் பிரச்னையில் இருந்து வெளிவர எனது பயிற்சி மையம் பெரிதும் உதவியது. சரியாக ஆங்கிலத்தை உச்சரிக்கவும், புரிந்துகொள்ளவும் சிறிது சிரமப்பட்டேன். பிறகு அவற்றை சரி செய்து கொண்டேன். இருந்தாலும், அதை நினைத்து நான் வருந்திய நாட்கள் அதிகம்.

எனது பைலட் பயிற்சி மையம் மிகவும் தரமானது. அங்குதான் விமானியாக அனைத்து திறமைகளையும் வளர்த்துக்கொண்டேன். இப்போது பைலட்டாக பணியாற்றுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. என் வாழ்நாள் கனவு நிறைவேறியது என்றார்.

Dailyhunt

No comments:

Post a Comment

Rain may be back for Christmas Expect Light To Moderate Rain Today, Says IMD

Rain may be back for Christmas Expect Light To Moderate Rain Today, Says IMD TIMES NEWS NETWORK  24.12.2024  Chennai : The weather system ov...