Tuesday, July 25, 2017

மாநில செய்திகள்

செங்கல்பட்டு மேம்பாலத்தில் இருந்து சமையல் கியாஸ் டேங்கர் லாரி 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது





சமையல் கியாஸ் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரியின் ‘ஸ்டீயரிங்’ கம்பி உடைந்ததால் கட்டுப்பாட்டை இழந்த லாரி, செங்கல்பட்டு மேம்பாலத்தில் இருந்து சுமார் 15 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது.

ஜூலை 25, 2017, 03:45 AM


செங்கல்பட்டு,
சென்னை எண்ணூரில் உள்ள இன்டேன் சமையல் கியாஸ் நிறுவனத்தில் இருந்து டேங்கர் லாரி ஒன்று 18 டன் எடை உள்ள சமையல் கியாஸ் நிரப்பிக்கொண்டு மதுரை நோக்கி நேற்று முன்தினம் மாலை புறப்பட்டது. இரவு 9 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பரனூர் சுங்கச்சாவடி தாண்டி செங்கல்பட்டு பைபாஸ் மேம்பலத்தில் லாரி சென்று கொண்டு இருந்தது.

அப்போது திடீரென லாரியின் ‘ஸ்டீயரிங்’ கம்பி உடைந்து விட்டது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி, மேம்பாலத்தில் இருந்து சுமார் 15 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது.

நல்லவேளையாக பள்ளத்தில் கவிழ்ந்த போது டேங்கரில் இருந்த கியாஸ் வெடிக்கவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. டேங்கர் லாரி டிரைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அந்த பகுதியை சுற்றிலும் சமையல் கியாஸ் நிறுவனத்தினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டு, யாரும் வேடிக்கை பார்க்காத வகையிலும், செல்போனில் புகைப்படம் எடுக்காமலும் தடை செய்தனர்.

கவிழ்ந்து கிடக்கும் லாரியில் இருந்து மற்றொரு டேங்கர் லாரிக்கு சமையல் கியாசை மாற்றும் போது செல்போன் மூலம் படம் பிடித்தால் அதில் இருந்து வரும் ‘பிளாஷ் லைட்’ மூலம் திடீரென தீப்பிடிக்க வாய்ப்பு இருப்பதாலும், வேடிக்கை பார்க்க வரும் நபர்கள், தங்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு மீண்டும் சாவி போட்டு ‘ஆன்’ செய்யும் போதும் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாலும் இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கவே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாக சமையல் கியாஸ் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

பெங்களூருவில் இருந்து வாகனம் வந்த உடன் சமையல் கியாசை மற்றொரு லாரிக்கு மாற்றி விட்டு பூந்தமல்லியில் இருந்து ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்து கிடக்கும் லாரி மீட்கப்படும்.

கியாசை மாற்றும் போது மின் விளக்கு எரியக்கூடாது என்பதால் இன்று(அதாவது நேற்று) இரவு வருவதற்குள் லாரியை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம் என சமையல் கியாஸ் நிறுவனத்தார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...