Saturday, July 8, 2017

4 ஆயிரம் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முடிவு
Published on : 08th July 2017 09:17 AM |

நியூயார்க்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் அதிகமானவர்கள் இந்தியர்களே என கூறப்படுகிறது.

அமெரிக்காவை தலையிடமாக கொண்டு செயல்படும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சுமார் 1,92,000 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 71,000 பேர் அமெரிக்காவிலும், 1,21,000 பேர் மற்ற நாடுகளிலும் பணியாற்றுகின்றனர். இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவில் ஒரு பெரிய மறுசீரமைப்பை மேற்கொள்ளவும், வாடிக்கையாளர் மற்றும் பங்குதாரர்கள் சேவையை மேம்படுத்துவதற்காக சில மாற்றங்கள் மேற்கொள்ளபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அமெரிக்க நாளிதழ் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், இந்தியாவில் பிறந்த சத்யா நாதெல்லா தலைமையிலான தொழில்நுட்ப நிறுவனம் சுமார் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பணியாளர்களை குறைக்க திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளது.

இதில், அமெரிக்காவிற்கு வெளியே வேலை செய்பவர்களே அதிகமாக வேலை இழக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்புடைய செய்தித்தொடர்பாளர் ஒருவரால் கூறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் வெளிநாடுகளில் இருந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு வேலை செய்து வருபவர்கள் வேலை இழக்க அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக, இந்தியாவை சேர்ந்தவர்களே அதிகயளவில் வேலையை இழக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பிற நிறுவனங்களில் நடப்பதை போன்று தான் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலும் மாற்றங்கள் நடந்து வருகிறது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த முடிவால் அதில் பணியாற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த வாரம், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பணியில் ஒரு மறுபரிசீலனை செய்துள்ளதுடன் உலகம் முழுவதும் 50 ஆயிரம் மக்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பணியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் "சரியான நேரத்தில் சரியான வாடிக்கையாளர்களுக்கான உரிமை வளங்களை சீரமைக்க எங்களுக்கு உதவும்" என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வரவிருக்கும் ஆண்டுகளில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் "மிகப்பெரிய 4.5 டிரில்லியன் டாலர் சந்தை வாய்ப்பை" பெறும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024