உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வில் 6,709 பேர் தேர்ச்சி
உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வில், 6,709 பேர் தேர்ச்சி
பெற்றுள்ளனர்.நாடு முழுவதும், அரசு மருத்துவமனைகளில், 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' எனப்படும், முதுநிலை உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளான, டி.எம்., - எம்.சி.எச்.,க்கு, 1,215 இடங்கள் உள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் அதிகபட்சமாக, 192 இடங்கள் உள்ளன.இளநிலை, முதுநிலை
மருத்துவப் படிப்புகள் போன்று, உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும், 'நீட்' தேர்வு அடிப்படையிலேயே, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.இதன்படி, ஜூன், 10, 11ல் நடைபெற்ற, 'நீட்' தேர்வில், தமிழகத்தில், 2,500 பேர் உட்பட, நாடு முழுவதும், 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், http://www.nbe.edu.in என்ற இணையதளத்தில், சமீபத்தில் வெளியாகின. அதில், பொது மருத்துவப் பிரிவு, பொது அறுவை சிகிச்சை பிரிவு டாக்டர்கள் என, மொத்தம், 6,709 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்த படிப்புகளுக்கான, 50 சதவீத இடங்களுக்கு மத்திய அரசும், மீதமுள்ள இடங்களுக்கு மாநில அரசும் மாணவர் சேர்க்கையை நடத்தி வந்தன. இந்தாண்டு முதல், 100 சதவீத இடங்களையும், மத்திய அரசே நிரப்ப உள்ளது.கவுன்சிலிங் குறித்த விபரங்களை, http://www.mcc.nic.in, http://mohfw.nic.in என்ற, இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என, மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment