Wednesday, July 19, 2017

இன்ஜி., கவுன்சிலிங்: மெக்கானிக்கல் 'டாப்'

பதிவு செய்த நாள் 18 ஜூலை
2017
22:21

அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புக்கு, தமிழக அரசு நடத்தும், ஒற்றை சாளர கவுன்சிலிங், நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டு நாட்கள், தொழிற் கல்வி மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில், 2,084 மாணவர்கள், கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டனர்; 531 பேர் வரவில்லை. பங்கேற்றவர்களில், 72 பேர், தங்களுக்கு பிடித்த கல்லுாரியில், பிடித்த பாடப்பிரிவு இல்லாமல், இட ஒதுக்கீடு பெறவில்லை. இறுதியில், 1,481 பேர் இடங்கள் ஒதுக்கீடு பெற்றனர். இதில், 1,041 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள்.

அரசு, அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், மொத்தம், 155 இடங்களில், 153 இடங்களும்; சுயநிதி கல்லுாரிகளில், 6,170 இடங்களில், 1,328 இடங்களும் நிரம்பின. அதிகபட்சமாக, 657 மாணவர்கள், மெக்கானிக்கல் பிரிவை தேர்வு செய்துள்ளனர். எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், 204; எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், 187; சிவில், 157; கம்யூ., சயின்ஸ், 110; ஐ.டி., 39, ஏரோநாட்டிகல், 12; ஆட்டோமொபைல், 31; பயோ டெக்னாலஜி, மூன்று பேர் தேர்வு செய்துள்ளனர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 24.11.2024