Wednesday, July 19, 2017

அரசு ஊழியர் ஊதிய உயர்வு : ஜெயகுமார் விளக்கம்

பதிவு செய்த நாள் 18 ஜூலை
2017
21:11

சென்னை: ''தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த, அரசு அமைத்துள்ள குழு, அறிக்கை தந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, நிதியமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

சட்டசபையில், கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:
தி.மு.க., - பொன்முடி: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்துள்ள, ஜாக்டோ - ஜியோ அமைப்பு, போராட்டத்தை அறிவித்துள்ளது. அவர்கள், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் முக்கியம். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள், எப்போது அமல்படுத்தப்படும்?


நிதியமைச்சர் ஜெயகுமார்: ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரை செய்ய, கூடுதல் தலைமை செயலர் தலைமையில், குழு அமைக்கப்பட்டு உள்ளது.

குழு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களை சந்தித்து, கருத்துக்களை கேட்டறிந்து உள்ளது. அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க, மூன்று மாதங்கள் அவகாசம் கேட்டனர்; அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. அறிக்கை கிடைத்ததும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024