Sunday, July 9, 2017

பிரபல நாளிதழ், வார இதழ்களை இணையத்தில் திருடியவர் கைது! -பிரான்ஸ் கூட்டாளியும் சிக்குகிறார்

பிரபல நாளிதழ் மற்றும் வார இதழ்களை இணையத்தில் திருடி, பல லட்சக் கணக்கில் சம்பாதித்த, ஐ.டி. ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞர் ஆனந்த் (23). இவர் சென்னையில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் பிரபல தனியார் தமிழ், ஆங்கிலம் நாளிதழ் மற்றும் வார இதழ்களை இணையத்தில் திருடி, அதை magnet.com என்ற இணையதளம் மூலம் புழக்கத்தில் விட்டு, பல லட்சக் கணக்கில் பணம் சம்பாதித்து வந்தார்.

இதையடுத்து, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் இவருக்கு சம்பந்தம் இருப்பதை அறிந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஆனந்தை இன்று கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஃபிரான்ஸ் நாட்டில் பணிபுரிந்து வரும் முகமது இஸ்மாயில் என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.



இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் ஃபிரான்ஸ் தூதரகம் மூலம் முகமது இஸ்மாயிலிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இன்று கைது செய்யப்பட்ட ஆனந்த், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Dailyhunt

No comments:

Post a Comment

Driverless metro to begin trials at Madhavaram by '28

Driverless metro to begin trials at Madhavaram by '28  24.12.2024 Chennai : Chennai Metro Rail Limited (CMRL) will begin testing its fir...