''எங்க நாய் இது இல்லைங்க!''- பரிதவிக்கும் ஜெர்மன் தம்பதி... பதறும் போலீஸ்
சென்னை மெரினா கடற்கரையில் ஜெர்மன் தம்பதி அழைத்து வந்த வெளிநாட்டு நாய்
மாயமானது. அந்த நாயை போலீஸார் தேடியபோது அதே உருவத்தோற்றத்தில் தெருவில்
சுற்றித்திரிந்த இன்னொரு நாயைப் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு
வந்தனர். அந்த நாய் செய்த
அட்டகாசத்தால் மெரினா போலீஸ் நிலையமே பரபரப்பானது.
ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டீஃபன் கக்ராஹ் மற்றும் அவர் மனைவியும் சுற்றுலாவுக்காக சென்னை வந்தனர். தங்களுடன் கறுப்பு நிற நாய் ஒன்றையும் அழைத்துவந்திருந்தனர். அந்த நாயின் பெயர் 'லூக்'. மெரினா கடற்கரையில் லூக்கை காரில் கட்டிவைத்திருந்த ஜெர்மன் தம்பதி, காருக்குள் அமர்ந்திருந்தனர். இந்த சமயத்தில் லூக்கை யாரோ திருடிச் சென்றுவிட்டனர் . இதுகுறித்து அவர்கள் மெரினா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் லூக்கை போலீஸார் தேடி வருகின்றனர். இதற்கிடையில் சமூக வலைதளத்திலும் லூக்கின் புகைப்படத்தைப் பதிவு செய்த ஜெர்மன் தம்பதி, அதைக் கண்டுபிடித்து தருபவர்களுக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். இந்தத் தகவல் வைரலாகப் பரவியது.
போலீஸாரைவிட நெட்டிசன்கள் லூக்கை அதிகமாகத் தேடினர். ராயபுரம் பகுதியில் லூக்கின் உருவத் தோற்றத்துடன் ஒரு நாய் சுற்றித்திரிந்தது. அதைப்பார்த்த இளைஞர்கள், லூக் என்று கருதி, மெரினா போலீஸ் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். உடனே, மெரினா போலீஸார் அங்கு சென்றனர். அங்கே சுற்றித் திரிந்த கறுப்பு நிற நாயைப் பிடிக்க முயன்றனர். அப்போது, அந்த நாய் ஓட்டம் பிடித்தது. போலீஸார் அதை விரட்டிச் சென்றனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, அந்த நாயைப் பிடித்தனர். பிறகு, அதைப் பத்திரமாக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். உடனடியாக இந்தத் தகவல் ஜெர்மன் தம்பதிக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் மகிழ்ச்சியடைந்தனர். நாயை உடனடியாகப் பார்க்க வேண்டும் என்று ஜெர்மன் தம்பதியினர் போலீஸாரிடம் அன்பு வேண்டுகோள் விடுத்தனர். இதனால், நாயை செல்போனில் போட்டோ எடுத்து, ஜெர்மன் தம்பதிக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினர். (நாயைப் போட்டோ எடுப்பதற்குள் படாதபாடுபட்டது தனிக்கதை!)
அதைப் பார்த்து முதலில் ஜெர்மன் தம்பதி மகிழ்ச்சியடைந்தனர். தொடர்ந்து போட்டோவை உற்று நோக்கியபோது, அது தங்களுடைய நாய் இல்லை என்பதை ஜெர்மன் தம்பதி உறுதிப்படுத்தினர். பின்னர், இந்தத் தகவல் மெரினா போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால், அந்த நாயை மீண்டும் ராயபுரத்துக்கு அழைத்து சென்ற போலீஸார் அங்கு விட்டனர்.
இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "லூக்கைக் காணாமல் ஜெர்மன் தம்பதி கண்ணீர்மல்க எங்களிடம் புகார் கொடுத்தனர். நாய் மிஸ்ஸிங் தகவல் சமூக வலைதளத்திலும் பதிவு செய்யப்பட்டது. இதனால் கறுப்பு நிற நாய் குறித்து எங்களுக்கு போன் கால்கள் வந்தன. அப்படித்தான் இன்று காலை காசிமேட்டில் கறுப்பு நிற நாய் குறித்து தகவல் சொல்லப்பட்டது. இதனால், அங்கு போலீஸார் சென்று அந்த நாயை சிரமப்பட்டு பிடித்துக்கொண்டுவந்தோம். பிடிப்பதற்குள் எங்கள் எல்லாரையும் படாதபாடுபடுத்திவிட்டது. இருப்பினும் அந்த நாயின் போட்டோவை வாட்ஸ் அப்பில் ஜெர்மன் தம்பதிக்கு அனுப்பியபோது அவர்களும் 'தாங்க்ஸ்' என்று மெஜேஜ் அனுப்பினர்.
இதனால், நாயைக் கண்டுப்பிடித்துக் கொடுத்த திருப்தியில் நாங்கள் நிம்மதியடைந்தோம். அதற்குள் ஜெர்மன் தம்பதியின் நாயின் வயிற்றுப்பகுதியில் வெள்ளை நிறம் இருக்கும். ஆனால், நாங்கள் வாட்ஸ்அப்பில் அனுப்பிய நாயின் புகைப்படத்தில் வெள்ளை நிறமில்லை. அதைக்கண்டுப்பிடித்த ஜெர்மன் தம்பதி, இந்த நாய் எங்களுடையது இல்லை என்று தெரிவித்தனர். இதனால் ராயபுரத்திலேயே அந்த நாயை மீண்டும் கொண்டுபோய் விட்டுவிட்டோம். போலீஸ் நிலையத்தில் நாய், எல்லோரையும் பார்த்து குரைத்தது. நல்லவேளை யாரையும் அந்த நாய் கடிக்கவில்லை" என்றனர்.
நாய் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல்
இதற்கிடையில் ஜெர்மன் தம்பதியின் நாய், கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதைச் சிலர் செய்தியாகவும் வெளியிட்டனர். ஜெர்மன் தம்பதியினர், அந்த நாய் தங்களுடையது இல்லை என்று தெரிவித்தப் பிறகே செய்தி தவறானது என்பது தெரியவந்தது. ஜெர்மன் தம்பதியினர் தொலைத்த நாயால் மெரினா போலீஸ் நிலையத்துக்கு நாய் குறித்த விசாரிக்கும் படலம் அதிகமாகிவிட்டதாக அங்குள்ள போலீஸார் தெரிவித்தனர்.

Dailyhunt
No comments:
Post a Comment