Wednesday, July 5, 2017

'ஆதார் தகவல் பதிய வருவோரை
திருப்பி அனுப்புவது ஊழல் குற்றம்'

புதுடில்லி: 'ஆதார் அடையாள அட்டைக்காக பதிவு செய்ய வருவோரிடம், தொழிற்நுட்பக் கோளாறு உள்ளிட்ட காரணங்களை கூறி, அவர்களை திருப்பி அனுப்புவது, ஊழலாக கருதப்படும்' என, 'ஆதார்' அடையாள அட்டை ஆணையம் எச்சரித்துள்ளது.






யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அடையாள அட்டை ஆணைய தலைமை நிர்வாகி, அஜய் பூஷண் பாண்டே, டில்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: ஆதார் அடையாள அட்டை பெறுவதற்காக, நாடு முழுவதும், 25 ஆயிரம் பதிவு மையங்கள் செயல்பட்டுவருகின்றன. இந்த மையங்கள் அனைத்தும், விரைவில், அரசு அல்லது உள்ளாட்சி அமைப்பு களின் அலுவலக கட்டடங்களுக்கு மாற்றப்பட உள்ளன.

அடையாள அட்டை பெற வருவோர் பற்றிய தகவல்களை, ஆதார் ஆணைய இணையதளத்தில், கணினியைகையாளும் ஊழியர் பதிவேற்றம் செய்வார். ஆதார் அட்டைக்கான தகவல்களை பதிவு செய்ய வருவோரை, தொழிற்நுட்பக் கோளாறு உள்ளிட்ட, எந்த காரணத்தை கூறியும் திருப்பி அனுப்ப கூடாது; அவ்வாறு அனுப்புவது, ஊழல் நடவடிக்கையாக கருதப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

'நாடு முழுவதும், ஆதார் தகவல் பதிவு மையங் களில் உள்ள ஊழியர்கள், யாரையும் திருப்பி அனுப் பக் கூடாது' என, எங்கள் கள அலுவலகங்கள் மூலம் எச்சரிக்கப்பட்டுஉள்ளனர். யாராவது திருப்பி அனுப் பப்பட்டால், அது குறித்து புகார் அளிக்கும்படி, மக்களை கேட்டுக் கொள்கிறோம்.விதிகளை மீறும் ஆதார் தகவல் பதிவு மையங்களுக்கு, முதன்முறை, 10 ஆயிரம் ரூபாயும், அதன்பின் நடக்கும்

தவறுகளுக்கு, 50 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து தவறு செய்யும் மையங்கள், கறுப்புப் பட்டியலில் சேர்க்கப் படும்.

தொலைபேசி மூலம், ஆதார் எண், ஓ.டி.பி., எனப்படும், ஒருமுறை அனுப்பப்படும், 'பாஸ் வேர்டு' கேட்டு, தொலைபேசி மூலம் அழைப்பு வருவதாக புகார்கள் வருகின்றன. இத்தகைய மோசடி நபர்களிடம், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024