Sunday, July 9, 2017

காரைக்காலில் மாங்கனி திருவிழா மாம்பழங்களை அள்ளிய பக்தர்கள்


காரைக்கால், காரைக்கால் அம்மையார் கோவிலில் நடந்த, மாங்கனி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
காரைக்காலில், 63 நாயன்மார்களின் பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையாரின் வாழ்கை வரலாற்றை விவரிக்கும் வகையில், ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா நடைபெறும். இந்தாண்டுக்கான மாங்கனி திருவிழா,6ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.

நேற்று முன்தினம் காரைக்கால் அம்மையார் பரமதத்தருக்கு திருக்கல்யாணம் நடந்தது. மாலை பிஷாடணமூர்த்தி வெள்ளைசாத்தி புறப்பாடும், இரவு திருமண முடிந்த காரைக்கால் அம்மையார் பரமதத்தர் முத்து பல்லக்கில் வீதி உலா நடந்தது.

நேற்று அதிகாலை பிஷாடணமூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. நான்கு திசையிலும் வேதபாராயணங்கள், மேள தாளம் முழங்க, காலை, 6:30 மணிக்கு பவழக்கால் விமானத்தில் சிவபெருமான் காவியுடை, ருத்திராட்சம் தாங்கி பிச்சாண்டவர் மூர்த்தியாக எழுந்தருளி வீதி உலா வந்தார்.

அப்போது, சிவபெருமானுக்கு பக்தர்கள் மாங்கனியை வைத்து அர்ச்சனை செய்தனர். பின், வீட்டு மாடியில் இருந்து மாங்கனிகளை வீசும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, மாங்கனிகளை பிடிக்க போட்டாபோட்டியில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024