TNTET 2017 : தவறான பதில் , உயர்நீதிமன்றத்தில் வழக்கு
வந்தே மாதரம் வங்க மொழியில் முதலில் எழுதப்பட்டதா அல்லது சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டதா என்று அட்வகேட் ஜெனரல் தெரிவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பட்டதாரி ஆசிரியரான கே.வீரமணி தாக்கல் ெசய்த மனுவில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்துகொண்டேன். அதில் வந்தே மாதரம் எந்த மொழியில் எழுதப்பட்டது என்ற கேள்வி இருந்தது. கேள்விக்கு வங்கமொழி, உருது, மராத்தி, சமஸ்கிருதம் என்ற 4 பதில்கள் இருந்தன. கேள்விக்கு சரியான பதிலாக வங்கமொழி என்று எழுதினேன். ஆனால், எனது பதில் தவறு என்று கூறி எனக்கு ஒரு மதிப்பெண் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் மறுத்துவிட்டது.ஆசிரியர் தகுதித் தேர்வில் நான் 89 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன்.
தேர்வில் வெற்றி பெற 90 மதிப்பெண்கள் பெறவேண்டும். வந்தே மாதரம் எந்த மொழி என்ற கேள்விக்கு நான் சரியான பதில் எழுதியுள்ளதால் அதற்குஒரு மதிப்பெண் தந்தால் நான் தகுதித் தேர்வில் தேர்ச்சி ெபற்றிருப்பேன். பிஎட் படிப்பில் உள்ள அனைத்து புத்தகங்களிலும் வங்கமொழியில்தான் வந்தே மாதரம் எழுதப்பட்டது என்று உள்ளது. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கீ ஆன்சரில் மட்டும் சமஸ்கிருதம்என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வந்தே மாதரம் வங்கமொழியில் எழுதப்பட்டுள்ளது என்ற எனது பதிலுக்கு ஒரு மதிப்பெண் தருமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் பக்கிம் சந்திர சட்டர்ஜி வந்தே மாதரத்தை வங்க மொழியில்தான் முதலில் எழுதினார் என்றுவாதிட்டார்.
கூடுதல் அரசு பிளீடர், சமஸ்கிருதத்தில்தான் முதலில் வந்தே மாதரம் எழுதப்பட்டது என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்டநீதிபதி, வந்தே மாதரம் எந்த மொழியில் முதலில் எழுதப்பட்டது, வங்க மொழியிலா அல்லது சமஸ்கிருதத்திலாஎன்று அட்வகேட் ஜெனரல் தெரிவிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Posted by kalviseithi.net

No comments:
Post a Comment