நவம்பர் 1-ம் தேதி முதல் தாம்பரத்திலிருந்து செங்கோட்டை, நெல்லை, குஜராத்துக்கு புதிய ரயில்கள்
By DIN | Published on : 24th October 2017 10:12 PM
நவ.1ம் தேதி முதல் சென்னையின் புதிய முனையமாக செயல்பட தொடங்கியுள்ள தாம்பரத்திலிருந்து செங்கோட்டை, நெல்லை, குஜராத்துக்கு புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரைக்கு புதிதாக ஏசி சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்படும் என்றும் பகத்-கி-கோத்தி(ராஜஸ்தான்)க்கு ஹம்சபர் வாராந்திர எக்ஸ்பிரஸ், திருநெல்வேலிக்கும், செங்கோட்டைக்கும் தனித்தனியே தினசரி அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் திருநெல்வேலியில் இருந்து குஜராத் மாநிலம் காந்திதாமுக்கு வாராந்திர ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்கள் இயக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும் சென்னை எழும்பூரில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், காரைக்குடி, சேலம், மன்னார்குடி, நெல்லை, முத்துநகர் உட்பட பல ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளன.
இப்படி வேகம் அதிகரிப்பதால் ரயில்கள் புறப்படும் மற்றும் போய்ச்சேரும் நேரமும் நவ.1ம் தேதி முதல் மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி வேகம் அதிகரிப்பதால் ரயில்கள் புறப்படும் மற்றும் போய்ச்சேரும் நேரமும் நவ.1ம் தேதி முதல் மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment