விஜய்யின் முதல் 200 கோடி வசூல் படமாக அமையுமா 'மெர்சல்'?
விஜய் நடிப்பில் வெளியான படங்களில் முதல் 200 கோடி வசூலை கடந்த படமாக 'மெர்சல்' அமையவுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மெர்சல்'. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்குப் பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்கள். இதனால் பெரும் சர்ச்சை உருவாகி அடங்கியுள்ளது.
முதல் நாள் வசூலைத் தொடர்ந்து, 2-வது நாளில் கொஞ்சம் வசூல் குறைந்தது. ஆனால், ஜிஎஸ்டி வசனங்கள் தொடர்பான சர்ச்சை உருவானதிலிருந்தே வசூல் கடுமையாக உயர்ந்தது. வசனங்கள் அல்லது காட்சிகள் நீக்கப்பட்டு விடுமோ என்று மக்கள் கூட்டம் அதிகரித்தாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்தார்கள். இதனால் உலகளவில் 3 நாட்களில் சுமார் 100 கோடி வசூலைக் கடந்தது 'மெர்சல்'.
தமிழகத்தில் முதல் 5 நாட்களில் வசூலில், 'பாகுபலி 2' மற்றும் 'எந்திரன்' ஆகியவற்றுக்கு பின்னால் வந்துள்ளது. அக்டோபர் 18 - 22 வரை தமிழகத்தில் மட்டும் சுமார் 76 கோடி வசூல் செய்திருக்கிறது ‘மெர்சல்’. மேலும், உலகளில் இப்படத்தின் மொத்த வசூல் 150 கோடியை கடந்துவிட்டதாக வியாபார நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஏற்கெனவே 'துப்பாக்கி' படத்தின் ஒட்டுமொத்த வசூல் 150 கோடியை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் கணிசமான அளவு கூட்டமிருந்தால் கண்டிப்பாக உலக அளவில் 200 கோடி வசூல் என்ற சாதனையை 'மெர்சல்' நிகழ்த்தும் என்று கணித்திருக்கிறார்கள். பிரம்மாண்ட தயாரிப்பு என்பதால் அதனையும் தாண்டி வசூலித்தால் மட்டுமே தயாரிப்பாளருக்கு கணிசமான அளவு லாபம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment