Saturday, October 21, 2017



'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை  எழுந்து நின்று வரவேற்கணும்'

லக்னோ: 'அரசு அலுவலகங்களுக்கு வரும், அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று மரியாதையுடன் வரவேற்க வேண்டும். அதேபோல், அவர்கள் திரும்பும் போதும் இந்த மரியாதையை அளிக்க வேண்டும்' என, உத்தர பிரதேச அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. அரசு அதிகாரிகளுக்கு, மாநிலத் தலைமை செயலர், சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:

அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் அரசு அலுவலகங்களுக்கு வரும் போது, அவர்களை எழுந்து நின்று மரியாதையுடன் வரவேற்க வேண்டும். அவர்கள் திரும்பிச் செல்லும் போதும், இந்த மரியாதையை அளிக்க வேண்டும்.

மக்கள் பிரச்னை தொடர்பாக அவர்கள்கேட்கும் விபரங்களை உடனடியாக தர வேண்டும். அவர்கள் குறிப்பிடும் பணிகளை முன்னுரிமை அடிப்படை யில் நிறைவேற்ற வேண்டும்.

தங்களால் செய்ய முடியாத பணிகள் குறித்து, தெளிவாக விளக்கம் அளிக்க வேண்டும். மரியாதை

அளிக்கும் இந்த மரபு குறித்து பலமுறை குறிப்பிட்டும், சில அதிகாரிகள் அவமரியாதை செய்வதாக புகார் கள் வந்துள்ளன.இந்த மரபுகளை அனைத்து அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY