'கம்பராமாயணம் தந்த சேக்கிழார்' முதல்வரை வறுத்தெடுக்கும், 'நெட்டிசன்கள்'
கம்பராமாயணம் தந்த சேக்கிழார்' என, முதல்வர் பழனிசாமி பேசியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரை, சமூக வலைதளங்களில், 'நெட்டிசன்கள்' கலாய்த்து வருகின்றனர்.தஞ்சாவூரில் நடந்த எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில், முதல்வர் பழனி சாமி பேசுகையில், தஞ்சாவூர் பெருமைகளை பட்டியலிட்டார். அங்கு பிறந்து, புகழ் பெற்றவர்களை குறிப்பிடும்போது,
'கம்பராமாயணம் தந்த சேக்கிழார்' என்றார்.'டுவிட்டர்'கம்ப ராமாயணத்தை எழுதியவர், கம்பர்
என்பதை மறந்து,சேக்கிழார் என குறிப்பிட்டதை, அரசியல் தலைவர்கள், நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
பா.ம.க., நிறுவனர், ராமதாஸ், 'டுவிட்டர்' பதிவில், 'கம்பராமாயணம் தந்த சேக்கிழார் வாழ்ந்த பூமி - எடப்பாடிக்கு, தமிழகத்தை ஆளுவதில் தான் தோல்வி என்றால், மூன்றாம் வகுப்பு கேள்விக்கான பதிலை சொல்வதிலுமா' என, கேட்டுள்ளார்.'டுவிட்டர்' எம்.ஜி.ஆர்., என்பவர், 'அம்மா இந்நேரம் இருந்திருந்தா,கம்பராமாயணம் எழுதுனதே, எங்கம்மா தான்னு சொல்லிருப்பாங்க' என, தெரிவித்துஉள்ளார்.நாதஸ் என்பவர், 'அடுத்த பொதுக்கூட்டத்தை, தேனி மாவட்டம், கம்பத்தில் போடுங்க. ராமாயணத்தை, இந்த ஊரில் உட்கார்ந்து, சேக்கிழார் எழுதியதால் தான், கம்பராமாயணம் எனப் பெயர் பெற்றது என, அடிச்சி விட்டுருங்க' என, குறிப்பிட்டுள்ளார்.ராஜவேலு ராஜாஎன்பவர், 'டுவிட்டர்' பதிவில், 'அடடா... அடடா... கம்பர் மட்டும் உசுரோட இருந்திருந்தால், காதுல பாலிடால் ஊத்திக்கிட்டு தற்கொலை செய்திருப்பார்' என கூறியுள்ளார்.
'காலக் கொடுமை'மாதவன் என்பவர், 'சொன்ன இவரையே இந்த பாடுபடுத்துகிறோமோ இதையும் எழுதி கொடுத்து, வாசிக்கவைக்கிறவன் சிக்குனா என்னாகும்...'அப்ப, அவன் எப்படிப்பட்ட அறிவாளியா இருப்பான்' என, கேள்வி எழுப்பி உள்ளார்.விப்பேடு வீரா என்பவர், 'நீரை சேமிக்க, தெர்மாகோல் அமைச்சர்; சுதந்திர தினம், குடியரசு தினம் மறந்த எதிர்க்கட்சி தலைவர்; மக்களுக்கு தான் மறதி வியாதி... தலைவர்களுக்குமா' என, கேட்டு
உள்ளார்.சமீபத்தில் வருமான வரி சோதனையில் சிக்கிய, சசி உறவினர் இளவரசியின் மகள், கிருஷ்ணபிரியாவும், தன் பங்கிற்கு, முதல்வர் பேச்சு வீடியோவை, தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு, 'காலக் கொடுமை' என, விமர்சித்துள்ளார்.அதேபோல், நெல்லையில் ஸ்டாலின் பேசுகையில், குடியரசு தின தேதியை மாற்றி கூறினார்.
அதை குறிப்பிடும் வகையில், 'குடியரசு,சுதந்திர தினத்திற்குவேறுபாடு தெரியாத, தளபதி ஸ்டாலின்;இவர் தான் எதிர்க்கட்சி தலைவர்' என, கிருஷ்ணபிரியா கிண்டலடித்துள்ளார். - நமது நிருபர் -
No comments:
Post a Comment