சாங்கி விமான நிலையத்தில் புதிய டாக்சி நிறுத்துமிடம்
சிங்கப்பூர்: அண்மையில்
நீங்கள் சாங்கி விமான நிலையத்திற்குச் சென்றிருந்தால், முதலாம்
முனையத்தில் புதிய டாக்சி நிறுத்துமிடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதைக்
கண்டிருக்கலாம்...
தரைக்குக் கீழே உள்ள முதல் தளத்தில் இருக்கிறது புதிய டாக்சி நிறுத்துமிடம். இவ்வாரம் செவ்வாய்க்கிழமை அது திறக்கப்பட்டது.
முதலாம் முனையத்திற்கான விரிவாக்கப்பணிகளில் புதிய நிறுத்துமிடமும் அடங்கும்.
2019ஆம் ஆண்டில் திறக்கப்படவுள்ள ஜூவல் சாங்கி விமான நிலையத்திற்குத் தயாராகும் விதத்தில் அது அமைந்துள்ளது.
தேவைக்கேற்ப
பயணிகளிடம் டாக்சிகளைக் கொண்டுசேர்க்க அங்குள்ள அதிநவீன உணர்கருவிகள்
உதவுகின்றன. அத்தகைய தொழில்நுட்பத்தால் தனது சாலை நிர்வாகிகளின் வேலைகள்
சிலவற்றைக் குறைத்திருப்பதாக சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்தது.
No comments:
Post a Comment