Monday, December 25, 2017

நாம் வீசும் குப்பைகளைத் தினமும் அப்புறப்படுத்துவோர் 

23/12/2017 12:09 Update: 23/12/2017 21:27

சிங்கப்பூரில் கைக்கு எட்டும் தூரத்தில் உள்ள குப்பைத் தொட்டிகளில் நிரம்பிவழியும் குப்பைகளைத் தினமும் அப்புறப்படுத்தும் பணிகள் நடக்கின்றன.



அவை மீண்டும் நிரம்புவதற்கு அதிக நேரம் எடுக்காது.

கடந்த ஆண்டு சிங்கப்பூரில் மொத்தம் 7.81 ட்டன் குப்பைகள் சேர்ந்தன.
3 பெரிய நீச்சல் குளங்களின் அளவு அது.




2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அது 140,000 ட்டன் அதிகம்.
பிளாஸ்டிக் குப்பைகளும் உணவுப் பொருட்களும் ஆக அதிக அளவில் தூக்கிப் போடப்படுவதாகக் கூறப்படுகிறது.

அத்தகைய குப்பைகளை அப்புறப்படுத்தும் ஊழியர்களின் ஒரு நாள் வேலை எப்படி இருக்கிறது என்று அறிய முற்பட்டது சேனல் நியூஸ்ஏஷியா.



அதன் செய்தியாளர் ஒருவர், குப்பைகளை அப்புறப்படுத்தும் ஊழியருடன் இணைந்து சில நாட்களுக்கு வேலை பார்த்தார்.

புக்கிட் பஞ்சாங்கில் 29 புளோக்குகளில் இருந்து குப்பைகளை அப்புறப்படுத்தும் ஊழியர்கள் எத்தகையச் சூழலில் வேலை செய்கின்றனர் என அதன் வழி தெரியவந்தது.



27 வயது சுவேலின் வேலை குப்பைகளை அப்புறப்படுத்துவது.

சுற்றுவட்டாரத்தைத் தூய்மையாக வைத்திருப்பது.

காலை 7 மணிக்குத் தொடங்குகிறது அவரது வேலை.
இரவு 7 மணிக்குத் தான் முடிகிறது அயராத பணி.



கொஞ்சம் ஆங்கிலம், மலாய் பேசத் தெரிந்த சுவேல் பங்களாதேஷைச் சேர்ந்தவர். திருமணமாகி 6 மாதங்கள் கூட ஆகவில்லை.



மாதந்தோறும் 700 வெள்ளி சம்பளம். அதற்காக தினந்தோறும் குனிந்து நிமிர்ந்து கனமான பொருட்களைத் தூக்கி, அசுத்தம், பூச்சிகள் என முகம் சுளிக்காமல் வேலை செய்ய வேண்டும்.
சிரமங்கள் நிறைந்திருந்தாலும் நேர்மையாக வாழ்வதில் பெருமை என்றார் மலர்ந்த முகத்துடன் சுவேல்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024