வரதட்சணை வாங்கினரா: அரசு ஊழியர்களுக்கு அதிரடி
Added : டிச 01, 2017 03:31 | கருத்துகள் (10)
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அரசு ஊழியர்கள், திருமணத்தின் போது வரதட்சணை வாங்கினரா, இல்லையா என்பது குறித்து, பிரமாண பத்திரம் வழங்கும்படி, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தானில், கடந்த ஐந்து ஆண்டுகளில், அரசு துறைகளில் பணியில் சேர்ந்த ஊழியர்கள், தங்கள் திருமணத்தின் போது வரதட்சணை வாங்கினரா, இல்லையா என்பது குறித்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, மாநில அரசு பிறப்பித்த உத்தரவு:
பிரமாண பத்திரத்தில், ஊழியர்கள் பணியில் நியமிக்கப்பட்ட தேதி, துறை ஆகியவற்றுடன், திருமணமானவர்கள் என்றால், திருமணத்தின் போது வரதட்சணை வாங்கினாரா, இல்லையா என்பதை குறிப்பிட்டு, கையெழுத்திட்டு, பெற்றோர், மனைவி மற்றும் மனைவியின் பெற்றோரின் கையெழுத்துடன் வழங்க வேண்டும். மேலும், எதிர்காலத்தில், மனைவி அல்லது அவரது பெற்றோரிடம் வரதட்சணை கேட்டதாக புகார்கள் வந்தாலோ அல்லது நீதிமன்றத்தை அணுகினாலோ, அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment