Friday, December 1, 2017

கனமழை: சென்னை, மதுரை உள்ளிட்ட 13 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
 


  சென்னை : கனமழை காரணமாக மதுரை, கன்னியாகுமரி, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, விழுப்புரம், காஞ்சிபுரம் சென்னை, சேலம், திருவண்ணாமலை, திருவள்ளூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இயங்கிவரும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று(டிச.,01) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை:

கன்னியாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் அடுத்த 12 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் கனமழை பெய்து வருகிறது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:

இதனையடுத்து மாணவர்கள் நலன்கருதி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இயங்கி வரும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

சென்னை, திண்டுக்கல்,விழுப்புரம், காஞ்சிபுரம், தேனி, சேலம், திருவள்ளூர், புதுக்கோட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.

தாலுகாக்கள்:

நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய 4 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காளையார்கோயில், மானாமதுரை, இளையான்குடி மற்றும் திருப்புவனம் ஆகிய 5 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...