Friday, December 1, 2017

சென்னையில் விடிய விடிய பலத்த காற்றுடன் மழை

Updated : டிச 01, 2017 06:29 | Added : டிச 01, 2017 02:10



  சென்னை: சென்னையில் நுங்கம்பாக்கம், அண்ணாசாலை, கிண்டி உள்ளிட்ட பல இடங்களில் விடிய, விடிய கனமழை கொட்டி வருகிறது.

இந்திய பெருங்கடலில், உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர புயலாக மாறி, தென் மாவட்ட கடலோர பகுதிகளை புரட்டி எடுத்து வருகிறது. கன்னியாகுமரி, நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில், பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் நள்ளிரவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, அசோக்பில்லர், கத்திபாரா உள்ளிட்ட பல இடங்களில் கனமழை கொட்டி வருகிறது.


நேற்றைய(நவ.,30) நிலவரப்படி, சென்னையில் 37 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

மழை விவரம்:

தரமணி - 47 மி.மீ.,புழல் - 44 மி.மீ.,செம்பரம்பாக்கம் - 41 மி.மீ.,அண்ணா பல்கலை., - 32 மி.மீ.,பூந்தமல்லி - 32 மி.மீ.,

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...