உதய்பூர்: புதிய ஒரு ரூபாய் நோட்டினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனால் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு ரூபாய் நோட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
ஒரு ரூபாய் நாணயங்களுக்கு தட்டுப்பாடு அதிகமாக உள்ளதால், சில்லரை தட்டுப்பாட்டைப் போக்க ஒரு ரூபாய் நோட்டுக்களை மீண்டும் அச்சிட மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தன.
இந்நிலையில், இந்த புதிய ஒரு ரூபாய் நோட்டை உதய்ப்பூர் அருகே நத்வாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் ராஜீவ் மெஹ்ரிஷி வெளியிட்டார். இதை முன்னிட்டு ஸ்ரீநாத்ஜி சுவாமியின் பாதத்தில் 100 நோட்டுகள் கொண்ட ஒரு ரூபாய் நோட்டு கட்டை வைத்து வழிபட்டார். அவருடன் மனைவி மீரா மெஹ்ரிஷியும் உடன் வந்திருந்தார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ரூபாய் முதல் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன. நாணயங்களோடு ஒப்பிடுகையில் இவற்றின் வாழ்நாள் மிகவும் குறைவு. வாழ்நாளையும், அச்சிடும் செலவையும் கருத்தில் கொண்டு இவற்றை அச்சிடுவது நிறுத்தப்பட்டிருந்தது.

புதிய ஒரு ரூபாய் 9.7 செ.மீ, 6.3 செ.மீ நீள அகலம் கொண்ட இந்த நோட்டின் முன்புறத்தில் பாரத் சர்க்கார் என இந்தியிலும், அதன்கீழ் `கவர்மென்ட் ஆப் இந்தியா` என ஆங்கிலத்திலும் உள்ளது. நிதித்துறை செயலாளர் ராஜீவ் மெஹ்ரிஷி கையெழுத்து இடம்பெற்றுள்ளது.
No comments:
Post a Comment