உலகக் கோப்பை போட்டியில் தொடர்ந்து 5 அணிகளை ஆல்அவுட் ஆக்கி இந்திய அணி புதிய சாதனையை படைத்துள்ளது.
உலகக் கோப்பை போட்டியில் ஹாமில்டன் நகரில் இந்திய அணி அயர்லாந்து அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட் செய்தது. அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் போர்ட்ஃபீல்ட் 67 ரன்களும் ஸடிர்லிங் 47 ரன்களும் எடுத்து சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர்.
அடுத்து வந்த எட்ஜாய்ஸ் 2 ரன்களிலும் வெளியேறினாலும், ஓ பிரையன் அபாரமாக விளையாடி 75 ரன்களை எடுத்தார். மறுமுனையில் பல்பிரின் 24 ரன்கள் எடுத்தார். கடைசிக்கட்ட வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில் 49 ஓவர்களில் அயர்லாந்து அணி 259 ரன்களை எடுத்து ஆல்அவுட் ஆனது.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி தொடர்ந்து ஐந்தாவது முறையாக எதிர் அணியை ஆல்அவுட் ஆக்கி புதிய சாதனையை படைத்தது- இதற்கு முன் வேறு இதற்கு முன் எந்த அணியும் செய்திராத உலக சாதனை இது. முதலில் பாகிஸ்தான் அணியை 224 ரன்களில் இந்திய அணி முடித்தது.
அடுத்த ஆட்டததில் தென்ஆப்ரிக்க அணி 177 ரன்களில் ஆல்அவுட் ஆனது. பின்னர் யு.ஏ.இ அணி 102 ரன்களில் வீழ்ந்தது. அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி 182 ரன்களில் ஆல்அவுட் ஆனது. அந்த வகையில் இந்தியாவை எதிர்த்து 250 ரன்களுக்கு மேல் அடித்து அசத்தியுள்ளது அயர்லாந்து அணி. உண்மையை சொல்லப்போனால் பந்துவீச்சுதான் இந்திய அணிக்கு பலவீனம் என்றார்கள். இப்போது பந்துவீச்சுதான் இந்திய அணிக்கு பெரும் பலமாக மாறியுள்ளது.
No comments:
Post a Comment