உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடர் வெற்றி பெற்று வரும் இந்திய அணிக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவ்வளவாக விளையாட்டு பக்கம் திரும்பி பார்க்காதவர். குடியரசுத் தலைவராக இருந்த போது அவ்வப்போது விளையாட்டு வீரர்களை ஏதாவது விருது நிகழ்ச்சியில் சந்தித்து பேசுவதோடு சரி. விளையாட்டை விட்டு ஒதுங்கியிருக்கும் அவரையும் இந்த உலகக் கோப்பையில் தொடர் வெற்றி பெற்று வரும் இந்திய கிரிக்கெட் அணி அசைத்து பார்த்து விட்டது.
இந்திய அணி தொடர்ச்சியாக உலகக் கோப்பை போட்டியில் 5 வெற்றிகளை பெற்றதையடுத்து, அப்துல் கலாம் இந்திய அணி வீரர்களுக்கு இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் தளத்தில், ''வெல்டன் இந்தியா.. இதுவரை நீங்கள் பெற்ற வெற்றிக்கு முழு மதிப்பெண் ''எனக் கூறியுள்ளார்.
இதேபோல் பிரதமர் மோடியும் தனது ட்விட்டர் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். "உங்களின் அனைத்து செயல்திறனும் சூப்பர். இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். உங்களுடையே உத்வேகம் தொடரட்டும்" என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment