Tuesday, May 12, 2015

நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு தவறானது: ஆச்சார்யா பேட்டி!

பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீடு மனு மீது, நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில் அடிப்படை தவறுகள் உள்ளது என அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கூறியுள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான 

ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, 4 பேர் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து நேற்று உத்தரவிட்டார்.

இந்நிலையில், நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில் அடிப்படை தவறுகள் உள்ளன என அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''இந்த வழக்கில் ஜெயலலிதாவின் வருமானம் மற்றும் சொத்துக்கள் முறையாக கணக்கிடப்படவில்லை. சொத்து மதிப்பீடு குறித்து நீதிபதி குமாரசாமியின் விளக்கம் அடிப்படையில் தவறானது. நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில் அடிப்படை தவறுகள் உள்ளன.

இந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட வேண்டிய வழக்காகும். எனவே, மேல்முறையீடு செய்வது குறித்து கர்நாடக அரசு உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும்'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024