Wednesday, November 9, 2016

செல்லாது செல்லாது .. ரூ. 500 செல்லாது… ஈ ஓட்டும் ஓட்டல்கள்

சென்னை: நள்ளிரவு 12 மணியில் இருந்து ரூ. 500 செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது மக்கள் மத்தியில் ஒரே களேபரம் உருவாகிவிட்டது. கை உள்ள பணத்தை செலவு செய்ய முடியாததால் ஒரு ஓட்டலுக்கு போய் 2 இட்லி சாப்பிடக் கூட முடியாதவர்களாகிவிட்டனர் மக்கள்.


50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் சில்லரைகளாக மாறிப் போய் ரொம்ப நாள் ஆச்சி. 500 ரூபாய் நோட்டு என்பது எல்லோரின் பாக்கெட்டுகளிலும் கட்டாயம் இருக்கும் பணமாகிவிட்டதால், மத்திய அரசின் அறிவிப்பால் எந்த வேலையும் செய்ய முடியாமல் போய்விட்டது. இன்று உணவு விடுதிகள், டீக்கடைகள், மளிகைக் கடைகள், என எல்லா இடத்திலும் மக்களின் நடமாட்டம் குறைந்துவிட்டது.


இதனால் உணவு விடுதிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஹோட்டல் நிர்வாகத்தினர் கூறுகினார். அவசரத்திற்கு சாப்பிட முடியவில்லை என்று மக்கள் புலம்புகிறார்கள். மக்கள் மத்தியில் ஒரு நெருக்கடி நிலைக்கான மன நிலையை மத்திய அரசின் அறிவிப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

ஈ ஓடும் உணவகங்கள் இன்று சென்னையில் உள்ள உணவகங்களுக்கு சென்று சாப்பிட உட்காரும் வாடிக்கையாளர்களிடம் சர்வர்கள் வந்து என்ன சாப்பிடுரீங்க என்று கேட்பதில்லை. அதற்கு முன்பாக 500 ரூபாய் நோட்டை வாங்க மாட்டோம் என்றுதான் சொல்கிறார்கள். இதனால் கையில் 100 ரூபாய் நோட்டு இருப்பவர்கள் மட்டுமே உணவகங்களில் சாப்பிட முடிகிறது. அதுவும் 100 ரூபாய்க்கு ஏற்றபடி டீயோ, காபியோ, இட்லியோ சாப்பிட்டுவிட்டு செல்ல வேண்டியதுதான். மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பால் எல்லா உணவகங்களில் கூட்டம் மிகக் மிகக் குறைவாகவே இருக்கிறது. வருபவர்கள் டீ அருந்துவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். காலை 8 மணிக்கு கூட்டம் அலை மோதும், திருவல்லிக்கேணி ரத்னா கேப் ஹோட்டலிலும், பீட்டர்ஸ் சாலை சரவண பவனிலும் வாடிக்கையாளர்கள் வராமல் வெறிச்சோடியே காணப்பட்டன. புலம்பும் மக்கள் இதுகுறித்து, வாடிக்கையாளர் ஒருவர், திடீர்னு சொன்னா நாங்க என்ன செய்ய முடியும். நாங்க ரெண்டு பேரும் வேலைக்கு போறவங்க. காலையில பிள்ளைங்க பள்ளிக் கூடம் போறாங்க. அதனால் ஓட்டலுக்கு வந்து குழந்தைகளுக்கு காலை டிபன் வாங்கி கொடுத்துட்டு நானும் சாப்பிடலாம்ன்னு வந்தா 500 ரூபாய் இருந்தா சாப்பிடாதீங்கன்னு சொல்லுகிறார்கள். என்ன செய்றதுன்னு தெரியல என்று புலம்பினார்.

கை பிசையும் ஓட்டல் நிர்வாகம்

 இதுகுறித்து ரத்னா கேப் காசாளரிடம் கேட்ட போது, பாதி வியாபாரம் கூட இன்னிக்கு இல்லிங்க. மக்கள் வரமாட்டேங்குறாங்க. நாங்களும் சில்லரைக்கு எங்கு போறது. போற வரைக்கும் போகட்டும் என்று ஓட்டலை திறந்து வைத்துக் கொண்டு இருக்கிறோம். இன்னும், ரெண்டு மூனு நாளைக்கு இப்படித்தான் இருக்கும் போல. அட்ஜஸ்ட் பண்ண வேண்டியதுதான் என்றார் விரக்தியாக மூடப்பட்ட பெட்ரோல் பங்க் சென்னையில் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சில பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டுள்ளன. சில்லரை கொடுக்க முடியாததாலும், வரும் வாடிக்கையாளர்களுக்கு பதில் சொல்ல முடியாத சூழல் உள்ளதாலும் முடிவிட்டால் நல்லது என்று ராயப்பேட்டை மருத்துவமனை எதிரில் உள்ள பெட்ரோல் பங்க் மூடப்பட்டது.

அலைமோதும் பெட்ரோல் பங்க் சில பெட்ரோல் பங்க் மூடப்பட்டுள்ளதால், திறந்திருக்கும் பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் அலை மோதுகிறது. திறந்திருக்கும் பெட்ரோல் பங்க்குகளிலும் பெட்ரோல் போட்டால் 500 ரூபாய்க்கு போடுங்கள். சில்லரை கிடையாது என்று வாடிக்கையாளர்களிடம் சொல்லி வருகின்றனர் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சொல்லி வருகிறார்கள். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் கூச்சலும் குழப்பமும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நிலவுகிறது. சில பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் வாடிக்கையாளர் சண்டையில் ஈடுபடுகின்றனர். மூடப்பட்ட ஏடிஎம் மையங்கள் சென்னை ராயப்பேட்டை, கோபாலபுரம், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம்கள், ஐடிபிஐ ஏடிஎம்கள், விஜயா பேங்க், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எச்டிஎப்சி என அரசு வங்கிகளின் ஏடிம்களும், தனியார் வங்கிகளின் ஏடிஎம்களும் மூடப்பட்டுள்ளன.

இதனால் 500 ரூபாய் நோட்டு செல்லாது என்ற செய்தி தெரியாத முதியவர்கள் சிலர் ஏடிஎம் மையங்களுக்கு வந்து பணம் எடுக்க முடியாமல் புலம்பிக் கொண்டே விரக்தியில் நடந்து போவதை பார்க்க முடிந்தது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/no-500-s-no-customers-hotels/slider-pf214304-266765.html

No comments:

Post a Comment

NEWS TODAY 27.09.2024