வாஸ்து ஆமை சிலைகள் விற்பனை அதிகரிப்பு
பதிவு செய்த நாள்04ஜூன்2017 23:44
திண்டுக்கல்: 'வாஸ்து' நிவர்த்திக்காக பொதுமக்கள் ஆமை சிலைகளை வாங்க ஆர்வம் காட்டுவதால், திண்டுக்கல்லில் அதன் விற்பனை அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணியர் வருகை தற்போது அதிகரித்துள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணியர் ஆமை சிலைகளை வாங்கிச் செல்லத் தவறுவதில்லை. 'ஆமை புகுந்த வீடு ஆகாது' எனக் கூறுவதை பின்னுக்குத் தள்ளி, தற்போது ஆமை வடிவ சிலைகளுக்கு ஏகப்பட்ட மவுசு உருவாகியுள்ளது. திண்டுக்கல்லில், வசிக்கும் சிலர் பச்சை ஆமைகளை வீட்டுத் தொட்டியில் செல்லப் பிராணியாகவே பாவித்து வளர்க்கின்றனர். வெண்கலம், பீங்கான், மரப்பொருள்களால் செய்யப்பட்ட ஆமை சிலைகளை பலர் வாங்கிச் செல்கின்றனர்.

No comments:
Post a Comment