Tuesday, June 27, 2017

மாட்டு வண்டி ஊர்வலத்தில் மணவாழ்க்கை தொடக்கம்; பழமையை காதலிக்கும் டாக்டர் தம்பதி

பதிவு செய்த நாள்26ஜூன்
2017
23:43




காரைக்குடி: சிவங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த டாக்டர் சண்முகம் மகள் ஷோபனா- அருண் திருமணம் அரியக்குடி பெருமாள் கோயிலில் நடந்தது.

மணமக்கள் இருவரும் டாக்டர்கள். திருமணத்திற்கு பிறகு, ஒரு கி.மீ., தொலைவில் உள்ள திருமண மண்டபத்துக்கு, மணமக்கள் இருவரும் மாட்டு வண்டியில் அழைத்து வரப்பட்டனர்.

உறவினர்கள் உடன் நடந்தே வந்தனர். மாட்டு வண்டிக்கு முன் பாரம்பரிய இசையை இசைத்தபடி கலைஞர்கள் சென்றனர்.

மணமகள் ேஷாபனா கூறியதாவது: நம் முன்னோர் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காமல் வாழ்ந்து வந்தனர். கலாச்சாரமும் பண்பாடும் பாதுகாக்கப்பட்டது. தற்போது அதை விட்டு விலகியதால், நாம் பல்வேறு நோய்க்கு ஆளாகிறோம். நோய்களிலிருந்து நம்மை காத்து சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை தவிர்க்க வேண்டும்.
அதன் அடிப்படையில் இந்த புகையில்லா மாட்டு வண்டியில் எங்கள் இல்வாழ்க்கை பயணம் ஆரம்பித்துள்ளது. மாட்டு வண்டியை பார்ப்பதே அரிதாக உள்ளது. இது போன்று அனைவரும் பின்பற்றும் பட்சத்தில் மாட்டு வண்டியும் பெருகும், பாரம்பரியமும் காக்கப்படும், என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 7.4.2025