Tuesday, June 27, 2017

பிள்ளையாய் வளர்ந்த 'கருப்பணசாமி' : காளை இறப்பால் கிராமத்தில் சோகம்

பதிவு செய்த நாள்27ஜூன்
2017
00:15



சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் ஒக்கப்பட்டியில் இறந்த கோயில் காளைக்கு, ஆறு கிராமங்களைச் சேர்ந்தோர் மரியாதை செலுத்தி அடக்கம் செய்தனர். ஒக்கப்பட்டி மந்தை கருப்பணசாமி கோயிலுக்கு 10 ஆண்டுகளுக்கு முன் காளைக்கன்று ஒன்று நேர்த்திக்கடனாக விடப்பட்டது. அதன் பெயர் 'மந்தை கருப்பணசாமி'. காளை மீது ஒக்குப்பட்டியை சுற்றியுள்ள பிடாரினேந்தல்பட்டி, மாணிக்கம்பட்டி, வி.புதுப்பட்டி, தேவன்பெருமாள்பட்டி, நல்லாண்டிப்பட்டி கிராமத்தினர், தங்களின் பிள்ளை போல அன்பு செலுத்தினர்.

குழந்தைகளுடன் நட்பு ; வீடுகளில் இதற்கு பழம், நெல், வைக்கோல் கொடுப்பர். விவசாய நிலத்தில் மேய்ந்தாலும் காளையை அடிக்க மாட்டார்கள். குழந்தைகளும் காளையுடன் நட்புடன் பழகுவர்.சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த காளை, நேற்றுமுன்தினம் இறந்தது. ஆறு கிராமங்களை சேர்ந்தோர் சோகத்தில் மூழ்கினர். காளை அலங்கரிக்கப்பட்டு கோயில் முன் வைக்கப்பட்டது. கிராமத்தினர் மாலை, வேட்டி அணிவித்து மரியாதை செலுத்தினர். நேற்றுகாலையில் அடக்கம் செய்யப்பட்டது.கிராமத்தினர் கூறுகையில், 'எங்களில் ஒருவரை இழந்தது போல் உள்ளது. அடக்கம் செய்த இடத்தில் நினைவிடம் அமைத்து வழிபட உள்ளோம். 

ஆனி கடைசி வாரத்தில் மந்தை கருப்பணசாமி கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா நடக்கும். காளை இறந்ததால், இந்த ஆண்டு திருவிழா நடத்த மாட்டோம். கோயிலுக்கு புதிய கன்று வாங்கி விட்டுள்ளோம்' என்றனர்.

No comments:

Post a Comment

Minister says no Pongal gift due to financial crisis

Minister says no Pongal gift due to financial crisis  TIMES NEWS NETWORK 10.01.2025 Chennai : Chief minister M K Stalin on Thursday launched...