Tuesday, June 27, 2017

'பரோல்' அல்லது ஜாமின் கவர்னரிடம் கர்ணன் மனு

கோல்கட்டா: கோர்ட் அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, கோல்கட்டா ஐகோர்ட் முன்னாள் நீதிபதி, சி.எஸ்.கர்ணன், தனக்கு ஜாமின் அல்லது 'பரோல்' அளிக்கக் கோரி, மேற்கு வங்க கவர்னருக்கு மனு அனுப்பியுள்ளார்.



மேற்கு வங்கம் மாநிலத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியாக இருந்த,தமிழகத்தைச் சேர்ந்த கர்ணனுக்கு, கோர்ட் அவமதிப்பு வழக்கில், ஆறு மாத சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட் விதித்திருந்தது.தலைமறைவாக இருந்தகர்ணன், சமீபத்தில், தமிழகத்தின் கோவையில் கைது செய்யப்பட்டார்.

கவர்னிடம் மனு

அதைத் தொடர்ந்து, கோல்கட்டாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நலக் குறைவுக்காக, அங்குள்ள மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், கர்ணன் சார்பில், அவரதுவழக்கறிஞர் நெடும்பரா, மேற்கு வங்க கவர்னர், கேசரிநாத் திரிபாதிக்கு ஒரு மனு அனுப்பியுள்ளார். 

அதில் கூறியுள்ளதாவது: சிறை தண்டனை விதிக்கும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளேன்.

அதில் முடிவு எடுக்கப்படும் வரை, ஜாமின் அல்லது பரோலில் விடுவிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநில உள்துறை மற்றும் சட்ட அமைச்சர்களுக்கும் இந்த மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, வழக்கறிஞர் நெடும்பரா கூறினார்.



No comments:

Post a Comment

Minister says no Pongal gift due to financial crisis

Minister says no Pongal gift due to financial crisis  TIMES NEWS NETWORK 10.01.2025 Chennai : Chief minister M K Stalin on Thursday launched...