Tuesday, June 27, 2017

ஒரே நாளில் மின் இணைப்பு வழிமுறைகள் வெளியீடு

பதிவு செய்த நாள்27ஜூன்
2017
01:03

ஒரே நாளில், மின் இணைப்பு வழங்கும் திட்டத்திற்கான வழிமுறைகளை, மின் வாரியம் வெளியிட்டுள்ளது. புதிய மின் இணைப்பு கோரி, மின் வாரிய பிரிவு அலுவலகங்களுக்கு செல்லும் மக்கள், அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். அதற்கு தீர்வு காண, ஒரு நாளில் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை, ஜூலை, 1 முதல், மின் வாரியம் செயல்படுத்த உள்ளது. தற்போது, அதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய திட்டங்கள் குறித்த விபரத்தை, பிரிவு அலுவலக பொறியாளர்கள், மக்களிடம் முறையாக கொண்டு சேர்ப்பதில்லை. அதனால், மக்களிடம் அவர்கள் லஞ்சம் வாங்குவது தொடர்கிறது. எனவே, ஒரே நாளில் மின் இணைப்பு பெறும் திட்டம் யாருக்கு பொருந்தும்; அதற்காக சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள், கட்டணம்
உள்ளிட்ட முழு விபரங்கள் அடங்கிய, வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. தற்போது, வாரிய இணையதளத்தில், அவை வெளியிடப்பட்டுள்ளன. மக்கள், அந்த விபரங்களை படித்து, அதில் இல்லாத நிபந்தனைகளை, பொறியாளர்கள் விதித்தால், தலைமை அலுவலக விஜிலென்ஸ்
அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

செயற்கை நுண்ணறிவு நமது நண்பன்! தொழில்துறை புரட்சியின் காலகட்டம் இது...

செயற்கை நுண்ணறிவு நமது நண்பன்! தொழில்துறை புரட்சியின் காலகட்டம் இது... செயற்கை நுண்ணறிவு  Din Updated on:  03 ஏப்ரல் 2025, 6:15 am  எஸ். எஸ்...