Sunday, June 18, 2017

மாநில செய்திகள்

தென்தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்

தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஜூன் 18, 2017, 05:15 AM

சென்னை,

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

தென் ஆந்திர கடலோர பகுதி முதல் தென் தமிழக கடலோர பகுதி வரை உள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலைகொண்டுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024