Wednesday, January 24, 2018

ஒரு நாள் பாஸ் ரூ.100 : மாத கட்டணமும் உயர்வு

Added : ஜன 24, 2018 04:43

மாநகர போக்குவரத்து கழக பேருந்தில் பயணிக்க, ஒரு நாள் விருப்ப கட்டணம், 50 ரூபாயிலிருந்து, 100 ரூபாயாக உயர்கிறது. அரசின் விழுப்புரம், கோவை, சென்னை, மதுரை, கும்பகோணம் உள்ளிட்ட போக்குவரத்து கோட்டங்களாக உள்ளன.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம், மாதந்தோறும், மாநகர பேருந்தில் விருப்ப பயணம் செல்ல, 1,000 ரூபாயும், ஒரு நாள் பயண கட்டணம், 50 ரூபாயும் நிர்ணயித்து, வழங்கி வந்தது.

இதன் மூலம், தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணம் மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில், 20ம் தேதி முதல், பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. இதன் எதிரொலியாக, ஒரு நாள் விருப்ப பயண கட்டணம், 50 ரூபாயில் இருந்து, 100 ரூபாயாக உயர்கிறது.அதே போல், மாத கட்டணம், 1,000லிருந்து, 2,000 ரூபாய்க்கு மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதன் காரணமாகவே தற்போது, விருப்ப பயண கட்டண சீட்டு விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.இன்னும் சில தினங்களில், கட்டண உயர்வுடன் கூடிய பயணச்சீட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

- நமது நிருபர் --

No comments:

Post a Comment

NEWS TODAY 12.06.2026

  Staff dismissal only for grave violations like corruption: SC  Insubordination, Indiscipline Not Reasons Enough For Sacking’ Dhananjay.Mah...