Saturday, June 20, 2015

சி.ஏ., முடித்த 412 பேருக்கு பட்டம்: ஐ.சி.ஏ..ஐ., வழங்கியது

சென்னை : தென் மண்டல 'இந்திய சார்ட்டட் அக்கவுன்டன்ட்ஸ்' என்ற ஐ.சி.ஏ.ஐ., கல்வி நிறுவனத்தில் படித்த, 412 பேருக்கு, பட்டங்கள் வழங்கப்பட்டன.ஐ.சி.ஏ.ஐ., நிறுவனத்தின் தென்மண்டல கல்வி நிறுவனம், சென்னையில் செயல்படுகிறது. இந்த மண்டலத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் மாணவர்கள், சி.ஏ., படிக்கின்றனர்.இந்த கல்வி ஆண்டில், சி.ஏ., முடித்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா, சென்னை ஐ.டி.சி., கிரான்ட் சோழா ஓட்டலில், நேற்று நடந்தது.இதில், சி.ஏ., முடித்த, 412 பேருக்கு, முன்னாள் எம்.பி., ரக்மான்கான் பட்டங்கள் வழங்கினார். ஐ.சி.ஏ.ஐ., துணைத் தலைவர் தேவராஜ ரெட்டி, ஐ.சி.ஏ.ஐ., கல்வி வாரிய தலைவர் முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், அகில இந்திய அளவில் முதல், 50 இடங்களுக்குள், 'ரேங்க்' பெற்ற ஏழு பேருக்கு, 'ரேங்க்' சான்றிதழ் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024