பீஜிங்:இந்தியர்கள் விசா இல்லாமல் ஹாங்காங் வருவதற்கான சலுகையை தொடர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.இந்தியர்கள் ஹாங்காங்கில் விசா இல்லாமல் சென்று 14 நாட்கள் தங்க அனுமதிக்கப்படுகின்றனர்.இந்த சலுகையை பயன்படுத்தி இந்தியாவில் இருந்து ஹாங்காங்கில் அடைக்கலம் புகுவோரின் எண்ணிக்கை சமீப காலத்தில் அதிகரித்து வருகிறது.இதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கான நேரம், செலவு ஆகியவற்றை கருதி
இந்தியர்களுக்கான விசா சலுகையை ரத்து செய்ய ஹாங்காங் அரசு முடிவு செய்தது.
இதை அமல்படுத்தினால் இந்திய தொழில் துறையினர் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுவர் என ஹாங்காங் அரசுக்கு இந்திய துாதரகமும் தொழில் கூட்டமைப்பும் எடுத்துக் கூறின. மேலும் ஹாங்காங்கின் சுற்றுலா வருவாயும் பாதிக்கப்படும் என வலியுறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து விசா சலுகையை ரத்து செய்யும் திட்டம் கைவிடப்பட்டதாக ஹாங்காங் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.ஹாங்காங்கில் இருந்து வருவோர் விசா இருந்தால் தான் இந்தியாவிற்குள் நுழைய முடியும்.பிரதமர் மோடி தனது சீன பயணத்தின்போது ''சீன சுற்றுலா பயணிகளுக்கு 'இ-விசா' வசதி அறிமுகப்படுத்தப்படும்'' என்று தெரிவித்தார். இதையடுத்து சீனாவின் அங்கமான ஹாங்காங்கிற்கும் 'இ-விசா' வசதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment