Wednesday, June 3, 2015

அரசு மருத்துவர்கள் 600 பேருக்கு நோட்டீஸ்; ஒடிஸா நடவடிக்கை: முகவரி தெரியாமல் நாளிதழ்களில் விளம்பரம்

ஒடிஸா மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளில் நீண்ட நாள்களாக பணிக்கு வராமல் உள்ள 613 மருத்துவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் அந்த மாநில அரசு திணறி வருகிறது.
இதையடுத்து, விளக்கம் கோரும் நோட்டீஸ்களை நாளிதழ்களில் பொது விளம்பரமாக வெளியிட்டு, ஒரு மாதத்தில் பதிலளிக்கக் கோரியும், தவறினால் சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.
ஒடிஸா அரசின் அறிவிப்பு விவரம் வருமாறு:
சரியான முகவரியின்றி, தேடிக் கண்டுபிடிக்கப்பட முடியாமல் இருக்கும் மேற்கண்ட 613 அரசு மருத்துவ அதிகாரிகளுக்கு தனித்தனியாக நோட்டீஸ் அனுப்புவது என்பது இயலாத செயல்.
எனவே 10 நாள்களில் நேரில் ஆஜராகி பெற்றுக்கொள்ளுமாறு மேற்கண்ட மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
நோட்டீûஸ பெற்றுக்கொண்ட 20 நாளில் எழுத்துபூர்வமான விளக்கத்தை அளிக்குமாறு அவர்களுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
நோட்டீûஸ பெற்று 30 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க தவறினால், நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் சரியானவை எனக் கருதப்படும்.
அதற்கேற்ப துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சர் அதானு எஸ். நாயக் கூறியதாது:
அனுமதியின்றி விடுப்பில் இருந்துகொண்டு நீண்ட காலமாக பணிக்கு வராமல் இருந்த 67 மருத்துவர்களை இதற்கு முன் அரசு பணி நீக்கம் செய்திருக்கிறது.
மருத்துவர்களின் தட்டுப்பாட்டைப் போக்க தாற்காலிக அடிப்படையில் 370 மருத்துவர்களை சில தினங்களில் நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது என்று நாயக் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024