பிரீடம் 251 ஸ்மார்ட்போனுக்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்தவர்களில், பணம் செலுத்தும் முதல் 25 லட்சம்பேருக்கு மட்டுமே மொபைல் வழங்கப்படும் என ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக் சத்தா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
சனிக்கிழமை மாலைவரை பிரீடம் 251 ஸ்மார்ட்போன் கோரி, 7 கோடி முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. போனுக்காக பணம் செலுத்தும் முதல் 25 லட்சம் பேருக்கு மட்டும் கூரியர் மூலம் ஸ்மார்ட் போன் அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு முன்பதிவு செய்பவர்களுக்கு போன் கிடைக்காது. வரும் ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கும் மொபைல் விநியோகம், ஜூன் 30-ம் தேதி நிறைவு பெறும். 30 ஆயிரம் பேர் பணம் செலுத்தியதைத் தொடர்ந்து, அதற்கான இணையபக்கம் திணறிப்போய், முடங்கியது. பணம் பெறுவதை நேரடியாக செய்யவில்லை. எந்த ஆவணங்களையும் கொடுக்கவில்லை. ஆன்லைனில் மட்டுமே பணப்பரிவர்த்தனை நடக்கிறது. ஏதேனும் படிவங்கள் கொடுக்கப்பட்டு, பணம் பெறப்பட்டதா என எங்களுக்குத் தெரியாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment